Advertisment

ரூ.2,000 நோட்டு வாபஸ்: வங்கிகளுக்கு இது சோதனை நேரம்

நாட்டில் சுமார் 1.55 லட்சம் வங்கிக் கிளைகள் இருப்பதால், ஒவ்வொரு கிளையும் சராசரியாக 11,677 , ரூ.2000 நோட்டுகளைக் கையாள வேண்டும். அல்லது மே 23 முதல் செப்டம்பர் 30, 2023 வரை ஒரு நாளைக்கு 116 ரூ.2000 நோட்டுகளைக் கையாள வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Fixed deposit rates for senior citizens

பொதுவாக வங்கிகள் ரூ.2 கோடிக்கும் கீழ் ஃபிக்ஸட் டெபாசிட் அதற்கு மேல் உள்ள டெபாசிட்களுக்கு என்று தனித்தனி வட்டியை விதிக்கின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தது. அதைத்

தொடர்ந்து மே 23-ம் தேதி முதல் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்தது. இந்நிலையில், வங்கிகள் மே 23 முதல் 181 கோடி ரூபாய் 2,000 நோட்டுகளை மாற்ற தயாராக வேண்டும்.

Advertisment

நாட்டில் சுமார் 1.55 லட்சம் வங்கிக் கிளைகள் இருப்பதால், ஒவ்வொரு கிளையும் சராசரியாக 11,677, ரூ.2000 நோட்டுகளைக் கையாள வேண்டும். அல்லது மே 23 முதல் செப்டம்பர் 30, 2023 வரை ஒரு நாளைக்கு 116, ரூ.2000 நோட்டுகளைக் கையாள வேண்டும். 2016 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் போல் அல்லாமல் இது கடந்து போகலாம்.

நாடு முழுவதும் உள்ள கிளைகள் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை மாற்றுவதில் குழப்பமான காட்சிகளைக் கண்டபோது, ​​சமீபத்திய நடவடிக்கையைக் கையாள வங்கிகள் ஊழியர்களை ஈடுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஒரு செலவு உள்ளது. அதற்கேற்ப ஏடிஎம்கள் மற்றும் பண மறுசுழற்சி இயந்திரங்களை மறுசீரமைக்க வங்கிகள் பணத்தை செலவிட வேண்டும்” என்று தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் அதிகாரி ஒருவர் கூறினார். ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி நாடு முழுவதும் 2.57 லட்சம் ஏடிஎம்கள் உள்ளன.

ரூபாய் நோட்டுகளில், "ரூ. 100 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மிகவும் விரும்பப்படுகின்றன" என்றும், "ரூ. 2,000 ரூபாய் நோட்டுகள் குறைந்த விருப்பமான மதிப்பு" என்றும் ரிசர்வ் வங்கி முன்பு கூறியிருந்தது.

2021-22 ஆம் ஆண்டிற்கான ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையில் வெளியிடப்பட்ட 'நுகர்வோரின் பணத்தாள் கணக்கெடுப்பு', பாலின பிரதிநிதித்துவத்துடன் 18-79 வயதுக்கு இடைப்பட்ட கிராமப்புற, செமி- அர்பன், நகர்ப்புற மற்றும் பெருநகரங்களில் இருந்து சுமார் 11,000 பதிலளித்தனர். 60:40 என்ற கணக்கில் ஆண்களும் பெண்களும் பங்கேற்றனர்.

இதில், ரூபாய் 100 மிகவும் விருப்பமானது என்றும், ரூ 2000 குறைந்த விருப்பமான மதிப்பு என்றும் கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. நாணயங்களில், 5 ரூபாய் மதிப்புடையது மிகவும் விரும்பப்பட்டது, அதே சமயம் 1 ரூபாய் குறைவாக விரும்பப்பட்டது என்று ரிசர்வ் வங்கி கூறியது.

வெள்ளியன்று ஆர்.பி.ஐ வெளியிட்ட அறிக்கையில், புழக்கத்தில் உள்ள ரூ 2000 நோட்களை திரும்பபெறப்படுகிறது என்று கூறியது. மேலும், மார்ச் 31, 2018 வரை ரூ 2000 நோட்கள் 37.3 சதவீதம் புழக்கத்தில் இருந்தது. அதாவது ரூ.6.73 லட்சம் கோடியில் இருந்து ரூ.3.62 லட்சம் கோடியாக தற்போது குறைந்துள்ளது. இது 10.8 சதவீதம் மட்டுமே. மார்ச் 31, 2023 அன்று புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் சுமார் 89 சதவீதம் ரூபாய் 2,000 ரூபாய் நோட்டுகள் மார்ச் 2017 க்கு முன் வெளியிடப்பட்டன. மேலும் அவற்றின் மதிப்பிடப்பட்ட நான்கு-ஐந்தாண்டு ஆயுட்காலம் முடிவடைகிறது.

2021-22 ஆம் ஆண்டிற்கான ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளின் பங்கு, மதிப்பு அடிப்படையில், மார்ச் 31, 2022 அன்று புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 87.1 சதவிகிதம் ஆகும். மார்ச் 31, 2021 அன்று 85.7 சதவீதத்திற்கு எதிராக. அளவு அடிப்படையில், ரூ. 500 மதிப்பிலான மதிப்பு 34.9 சதவீதமாக உயர்ந்தது, அதைத் தொடர்ந்து ரூ. 10 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள், மார்ச் 31, 2022 அன்று புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளில் 21.3 சதவீதமாக இருந்தன. .

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் வங்கிகள் அழுத்தத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில், வங்கிகளின் டெபாசிட்கள் ஓரளவு உயரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐ.சி.ஆர்.ஏ லிமிடெட் நிதித் துறை மதிப்பீடுகள் குழு தலைவர் கார்த்திக் சீனிவாசன் கூறுகையில், பணமதிப்பு நீக்கத்தின் போது கண்டது போல், வங்கிகளின் டெபாசிட் திரட்சியானது சமீப காலத்தில் ஓரளவு மேம்படும் என்று எதிர்பார்க்கிறோம். இது டெபாசிட் விகிதங்கள் உயர்வு மீதான அழுத்தத்தை குறைக்கும் மற்றும் குறுகிய கால வட்டி விகிதங்களில் மிதமான நிலையை ஏற்படுத்தலாம் என்றார்.

2016 ரூ.500, 1000 பணமதிப்பிழப்பின் முக்கிய நோக்கமாக கருப்புப் பணத்தை ஒழிப்பது, ரூபாய் நோட்டுகளாக பரிவர்த்தனை செய்வது குறைப்பது மற்றும் நிதி அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவது ஆகியவைகள் கூறப்பட்டன.

இருப்பினும், நவம்பர் 8, 2016 அன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அரசாங்கம் அறிவித்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, பொதுமக்களிடம் உள்ள நாணயம் இப்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பணம் செலுத்தும் விருப்பமான முறையில் ரொக்கம் இருப்பதால், மே 5, 2023 இல் முடிவடைந்த பதினைந்து நாட்களில் பொதுமக்களிடம் உள்ள கரன்சி அதிகபட்சமாக ரூ.33.66 லட்சம் கோடியாக இருந்தது - இது நவம்பர் 4, 2016 அன்று ரூ.17.97 லட்சம் கோடியிலிருந்து 87 சதவீதம் அல்லது ரூ.15.69 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 25, 2016 அன்று பதிவான ரூ.9.11 லட்சம் கோடியிலிருந்து பொதுமக்களிடம் இருந்த பணம் 269 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆர்.பி.ஐயின் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையை முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Rbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment