கல்வி, தொழில், திருமணம்: பெண்களுக்கான தனிநபர் கடன் ஓர் விரிவான பார்வை

கடன்கள் 12 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை திட்டமிடப்படலாம் என்பதால், பெண்கள் தங்கள் இலக்குகள் மற்றும் நிதி நிலைமைகளை பொறுத்து திருப்பி செலுத்தும் திட்டத்தை தேர்வு செய்யும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

கடன்கள் 12 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை திட்டமிடப்படலாம் என்பதால், பெண்கள் தங்கள் இலக்குகள் மற்றும் நிதி நிலைமைகளை பொறுத்து திருப்பி செலுத்தும் திட்டத்தை தேர்வு செய்யும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

author-image
WebDesk
New Update
Women personal loan

பெண்களுக்கான தனிநபர் கடன்கள், கல்வி, வணிகம் அல்லது மருத்துவ செலவுகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு நிதி அதிகாரமளிப்பு போன்ற வசதியை வழங்குகின்றது. மாறிவரும் உலகில், பெண்களின் குறிப்பிட்ட நிதி தேவைகளையும், இலக்குகளையும் பூர்த்தி செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த தனிநபர் கடன்கள் சுதந்திரத்திற்கான மிக முக்கியமான கருவியாகும். 

Advertisment

பெண்களுக்கான தனிநபர் கடன்கள் குறித்த ஓர் பார்வை:

இவை பிணையமற்ற கடன்கள். எனவே, பெண்களுக்கான தனிநபர் கடன்கள், தனிநபர்களின் பல்வேறு நிதி தேவைகளை இலக்காக கொண்டுள்ளன. கல்வி, சொந்த தொழில் தொடங்குதல், எதிர்பாராத மருத்துவ செலவுகள் அல்லது திருமணங்கள் போன்ற சுபநிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு இக்கடன்கள் பயன்படுத்தப்படலாம்.

முக்கிய அம்சங்கள்:

Advertisment
Advertisements

பிணையமற்ற நிதி: இந்த கடன்கள் பிணையமோ அல்லது உத்தரவாதமோ இல்லாத கடன்கள் என்பதால் எளிதாக கிடைக்கின்றன.

வட்டி விகிதங்கள்: நிதி உள்ளடக்கத்திற்கான வழிகளை வழங்குவதற்காக, பல கடன் வழங்குநர்கள் பெண் கடன் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் கடன் தகுதிக்கான ஆதாரமாக சிறந்த வட்டி விகிதங்களை வழங்கியுள்ளனர்.

திருப்பி செலுத்தும் முறை: கடன்கள் 12 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை திட்டமிடப்படலாம் என்பதால், பெண்கள் தங்கள் இலக்குகள் மற்றும் நிதி நிலைமைகளை பொறுத்து திருப்பி செலுத்தும் திட்டத்தை தேர்வு செய்யும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

விரைவான விநியோகம் மற்றும் குறைந்தபட்ச ஆவணங்கள்: குறைந்த ஆவணங்கள் மற்றும் எளிமையான விண்ணப்ப செயல்முறை காரணமாக பணம் விரைவாக அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. விரைவான நிதி உதவியை உறுதிப்படுத்த, பல நிறுவனங்கள் தங்கள் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு உடனடி கடன்களை வழங்குகின்றன.

தகுதி வரம்புகள்:

கடன் வழங்கும் தரநிலைகள் தனிப்பட்ட கடன் வழங்குநர்களால் நிர்ணயிக்கப்படுவதால், தகுதி தேவைகள் ஒரு கடன் வழங்குநரிடமிருந்து மற்றொருவருக்கு மாறுபடலாம். ஆனால் பொதுவாக பின்வருவனவற்றை உள்ளடக்கும்.

வயது: விண்ணப்பதாரர்கள் 21 - 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு: விண்ணப்பதாரர்கள் சுயதொழில் செய்பவராகவோ அல்லது சம்பளம் பெறுபவராகவோ இருக்கலாம். நிலையான வருமானத்தைக் காட்ட முடிந்தால், அவர்கள் எளிதாக தகுதி பெறலாம்.

வருமானம்: மாதம் ரூ. 15,000 குறைந்தபட்ச வருமானத் தேவை குறிப்பிடப்படலாம்.

கிரெடிட் ஸ்கோர்: உங்கள் கிரெடிட் ஸ்கோர் 685-க்கு மேல் இருந்தால், கடன் ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பெண்களுக்கான தனிநபர் கடன்: வட்டி விகிதங்கள் மற்றும் செயலாக்கக் கட்டணங்கள்:

 

வங்கி

வட்டி விகிதங்கள் (ஆண்டுக்கு)

செயலாக்கக் கட்டணங்கள்

எஸ்.பி.ஐ

10.30% - 15.30%

கடன் தொகையில் 1.50% வரை

ஹெச்.டி.எஃப்.சி வங்கி

10.90%  - 24.00%

ரூ. 6,500 + ஜிஎஸ்டி

ஹெச்.எஸ்.பி.சி வங்கி

10.15%  - 16.00%

கடன் தொகையில் 2% வரை

ஐ.சி.ஐ.சி.ஐ.சி வங்கி

10.85%  - 16.65%

கடன் தொகையில் 2% வரை

இண்டஸ்இன்ட் வங்கி

10.49%  மற்றும் அதற்கு மேல்

கடன் தொகையில் 3.5% மற்றும் அதற்கு மேல்

கொடக் மஹிந்திரா வங்கி

10.99% மற்றும் அதற்கு மேல்

கடன் தொகையில் 5% வரை

ஐ.டி.எஃப்.சி வங்கி

10.70%  மற்றும் அதற்கு மேல்

கடன் தொகையில் 2% வரை

 

 

குறிப்பு: வட்டி விகிதங்கள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடலாம். ஏனெனில், வங்கிகள் விண்ணப்பதாரரின் வேலைவாய்ப்பு, வருமானம் மற்றும் கிரெடிட் ஸ்கோர் ஆகியவற்றை பொறுத்து அவர்களின் சுயவிவரத்தை மதிப்பிடுகின்றன.

பெண்களுக்கான தனிநபர் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

ஆராய்ந்து ஒப்பிடுக: கடன் வழங்குநர்களை குறித்து ஆராய்ச்சி செய்து, உங்களுக்கான சிறந்த கடன் விருப்பங்களை யார் வழங்குகிறார்கள் என்பதை ஒப்பிடவும்.

உங்கள் தகுதியை சரிபார்க்கவும்: கடன் வழங்குநரால் குறிப்பிடப்பட்ட அனைத்து தேவைகளையும் நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா என்பதை சரிபார்க்கவும்.

ஆவணங்கள்: உங்களின் அடையாள அட்டை, முகவரி சான்று, வருமான சான்று, வங்கி கணக்கு அறிக்கைகள் போன்றவற்றை தயாராக வைத்திருக்கவும்.

விண்ணப்பிக்கவும்: நீங்கள் கடன் வழங்குநரின் கிளை, அவர்களின் வலைதளம் அல்லது மொபைல் அப்ளிகேஷன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஒப்புதல் மற்றும் விநியோகம்: பொதுவாக, உங்கள் கடன் ஒப்புதலுக்கு பிறகு, கடன் தொகை ஒரு நாளுக்குள் விநியோகிக்கப்படும்.

Loan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: