work from home jobs online jobs : பணம் வாழ்க்கையில் அவசியமான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பணத்தை சம்பாதிக்க தான் கோடீஸ்வரன்கள் தொடங்கி மிடில்கிளாஸ் மனிதர்கள் வரை அனைவரும் ஓடிக் கொண்டுடிருக்கிறார்கள். படிப்பதில் தொடங்கி உண்வு, ஆடை, நல்லது, கேட்டது என பணம் இல்லாமல் எதுவும் இங்கு நடப்பதில்லை.
Advertisment
முன்பெல்லாம் படித்து விட்டால் போதும் நல்ல வேளை கிடைத்துவிடும், கை நிறைய சம்பாதிக்கலாம். வீடு வாங்கிடலாம், கல்யாணம் பண்ணிடலாம் என எகப்பட்ட பிளான்களை போட்டு விடலாம். ஆனால், இப்போதெல்லாம் முதலில் வேளை கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் கைநிறைய சம்பளம் கிடைக்கும் என்றால் அது சந்தேகம் தான். ஒருவேளை அப்படி வருமானம் வந்தாலும் இருக்குற விலைவாசியில் வீடு வாங்குவது எல்லாம் எட்டா கனவாகி போகிறது. பிரைவைட் வேலை என்றால் அதை விட கொடுமை. எப்போதும் வேலை போகும் என்பது கூட தெரியாது.
அதுவும் இந்த கொரோனா ஊரடங்கால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி எத்தனையோ நிறுவனங்கள் சொந்த ஊருக்கு மூட்டை முடிச்ச கட்ட கிளம்பியாச்சு. இதனால் வேலை இழந்த இளைஞர்களும் ஏராளம். கவலைய விடுங்க.மாச சம்பளம் போனா போது. லட்சங்களில் வீட்டில் இருந்தப்படியே வேலை வந்தாச்சு. அதுக்கு தேவை வெறும் லேப்டாப் மட்டுமே.
Advertisment
Advertisements
உங்களிடம் இணைய வசதி இருந்தால் போதும், நீங்கள் வீட்டில் இருந்தபடியே தினமும் பணத்தை சம்பாதிக்கலாம். ஒரு சில நிறுவனங்கள் “டேட்டா என்ட்ரி” “குறுந்தகவல்” மற்றும் “மின்னஞ்சல்” பரிமாற்றம், “விவரங்களை சேகரித்தல்”, “இணைய எழுத்தாளர்” மற்றும் “விளம்பர பதிவாளர்” என ஏராளமான இணைய வேலைகள் இருக்கின்றன எனவே இதற்கான இணையப் பக்கங்களுக்கு சென்று 50 முதல் 80 ரூபாய் வரை முன் தொகையாக செலுத்தி வேலைகளை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களுக்கு தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் சம்பாதிக்கும் பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்துவிடும்.
இணையதளத்தில் அதிகமாக லாபத்தை ஈட்டும் நிறுவனங்கள் அனைத்தும் வியாபார நிறுவனங்களே, எனவே நீங்கள் பழைய பொருட்களை வாங்கி அதை சற்று அதிக விலைக்கு மீண்டும் மற்றொருவருக்கு விற்கலாம், இல்லை எனில் புதிதாக செய்யப்படும் பொருட்கள், ஆடைகள் போன்றவைகளை உங்கள் லாபத்தை சேர்த்து மீண்டும் விற்கலாம். பரிந்துரைப்பது மூலமாக ஒரு சில நிறுவனங்கள் அப்பொருட்களின் விலையிலிருந்து 5% உங்கள் வங்கி கணக்கில் சேர்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil