Income Tax Filing: 2018-19 ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கை 5 கோடியே 65 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர்.
Advertisment
இரண்டாவது முறையாக மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றுள்ளது. அன்று முதல் வருமான வரி வசூலில் தீவிரம் காட்டி வருகின்றது. அத்துடன் பல்வேறு சலுகைகளை அறிவித்தும் வருகிறது. வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் மட்டும் 49 லட்சத்து 29 ஆயிரத்து 121 பேர் ஆன்லைனில் கணக்குத் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதனால் இது ஓர் உலக சாதனை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்இ ஒரு மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்து 87 ஆயிரம் பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும் ஒரு நிமிடத்துக்கு 7 ஆயிரத்து 447 பேரும், நொடிக்கு 196 பேரும் என்ற அடிப்படையில் கடைசி நாளில் வேகமாக கணக்குத் தாக்கல் செய்ததும் புதிய சாதனையாக கூறப்படுகிறது.
டெக்னாலஜியில் கலக்கும் 103 வயது சென்னை இளைஞர்: ஃபிட்னஸ் ரகசியம் சொல்கிறார் கேளுங்க:
மேலும் ஆகஸ்ட் 27 முதல் 31-ம் தேதி வரை ஒரு கோடியே 47 லட்சத்து 82 ஆயிரம் பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். அத்துடன் 2018-19 நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை 5 கோடியே 65 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டுஇ 5 கோடியே 42 லட்சம் பேர் இந்த வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் பான்கார்ட் எண்ணை இணைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அப்படி செய்தால் ரீபண்ட் பணம்இ உரியவர்களின் கணக்குக்கு தவறாமல் சென்றடையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.