Wuling Electric Car features in tamil: சிறிய வகை கார்கள் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது டாடாவின் நானோ கார் தான். இந்திய மக்கள் சாலைகளில் டூவீலர்களில் குடும்பத்துடன் 3 பேர் 4 பேராகப் பயணிப்பதைப் பார்த்த டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா, சாதாரண நடுத்தர குடும்பத்தினர் செல்லும் வகையில் சிறிய ரக காரை உருவாக்கத் திட்டமிட்டார். அதன் விலை சுமார் 1 லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டது. ஆனால், ஆட்டோமொபைல் துறையில் இருந்த கடும் போட்டியால் காரின் விற்பனை சரிவு கண்டது. மேலும், ஒருகட்டத்தில் தயாரிப்பும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த வூலிங் என்ற நிறுவனம் சிறிய ரக எலெக்ட்ரிக் காரை இந்தோனேசியச் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக ஜகர்த்தா ஸ்போர்ட்ஸில் இந்த காரின் அறிமுகத்தை அந்நிறுவனம் செய்துள்ளது.
வூலிங்கின் சிறிய ரக எலெக்ட்ரிக் கார் - என்னென்ன வசதிகள் உள்ளன?
எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த காரின் முன்பக்கத்தில் சிறிய பானட் உடன் பெரிய ஏரோ டைனமிக் விண்ட் ஷீல்டு, சிங்கிள் பாக்ஸ் சில்லவுட், அமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சமே அதில் இருக்கும் எல்இடி பட்டை தான். இந்த எல்இடி பட்டைகள் காரின் முன்பகுதியில் பான்ட்டின் மேல் பகுதியில் நீளமாக உள்ளது. இது காரின் சைடு புரேபைலிக்கும் சென்று காரின் சைடு கண்ணாடி வரை உள்ளது. காரின் பம்பர் அருகே வழக்கமான ஹெட்லைட்களும், முகப்பு டிசைன் விஆர் கண்ணாடியின் டிசைன் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
வூலிங் நிறுவனம் சிறிய ரக எலெக்ட்ரிக் குறித்த அதிகாரப்பூர்வ செயல்திறன் மற்றும் அம்சங்கள் இதுவரை வெளியிடவில்லை. காரின் . வெளிப்பபுறத்தோற்றம் மற்றும் டிசைன் குறித்த தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதன்படி இந்த கார் 2 வேரியன்ட்டில், 2 சீட்டர் காராக விற்பனைக்கு வர உள்ளது. ஒன்று 2599 மிமீ மற்றொன்று 2974 மிமீ இந்த இரண்டு வேரியன்ட்களில் 2599 மிமீ நீளம் உள்ள வேரியன்ட் இரண்டு சீட்டராகவும், 2974 மிமீ நீளம் உள்ள வேரியன்ட் 4 சீட்டராகவும் விற்பனைக்கு வர உள்ளது.
இந்த இரண்டு கார்களிலும் ஒரே விதமான மோட்டரே பொருத்தப்படுகிறது. லீக் ஆன தகவலின்படி இந்த காரில் 40 எச்பி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த கார்கள் வருகிற நவம்பர் மாதம் 15-16 ஆகிய தேதிகளில் பாலியின் நடக்கும் ஜி20 மாநாட்டிற்கு அதிகாரப்பூர்வமான காராக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.