/indian-express-tamil/media/media_files/2025/08/16/2025-yamaha-fascino-and-rayzr-2025-08-16-12-33-11.jpg)
நியூ டிசைன், பவர் அசிஸ்ட், எக்ஸ்ட்ரா மைலேஜ்... யமஹா ஃபசினோ, ரேசர் 2025 மாடல்கள் அறிமுகம்!
பண்டிகை காலம் நெருங்கி வருவதை ஒட்டி, இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்களது விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர். இதன் ஒருபகுதியாக, இந்தியா யமஹா மோட்டார் (IYM) நிறுவனம், தனது 125cc ஹைபிரிட் ஸ்கூட்டர்களான ஃபசினோ (Fascino) மற்றும் ரேசர் (RayZR) ஆகியவற்றின் 2025 மாடல்களை புதிய அம்சங்கள், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் புதிய வண்ணங்களுடன் அறிமுகப்படுத்தி உள்ளது.
புதிய மாடல்களுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன, விரைவில் ஷோரூம்களில் கிடைக்கும். 2025 ரேசர் 125-ன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.79,340-ல் தொடங்குகிறது, அதே நேரத்தில் ஃபசினோ 125 ரூ.80,750-ல் தொடங்குகிறது. புதிய மாடல்களுக்கான முன்பதிவுகள் தொடங்கி விட்டன. விரைவில் விநியோகமும் தொடங்கும். 2025 யமஹா ரேசர் 125 ரூ.79,340 முதல் தொடங்குகிறது. 2025 யமஹா ரேசர் ரேலி ரூ.92,970, யமஹா ஃபசினோ 125 ரூ.80,750 முதல் தொடங்குகிறது. 2025 யமஹா ஃபசினோ எஸ் (S): ரூ.95,850 கிடைக்கும்.
யமஹா நிறுவனம் முதன்முறையாக, ஃபசினோ 125-ல் புதிய டாப்-ஸ்பெக் 'S' வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடலில், யமஹா இந்தியாவின் எந்த ஸ்கூட்டரிலும் இல்லாத வகையில், TFT இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ப்ளூடூத் இணைப்பு, Y-கனெக்ட் செயலி ஆதரவு மற்றும் டர்ன்-பை-டர்ன் வழிசெலுத்தல் (turn-by-turn navigation) போன்ற அம்சங்கள் உள்ளன. 2025 யமஹா ஃபசினோ S TFT-யின் விலை ரூ.1,02,790 ஆகும்.
புதிய வண்ணங்கள்:
2025 ஃபசினோ S: மேட் க்ரே (Matte Grey), 2025 ஃபசினோ (டிஸ்க் பிரேக் மாடல்): மெட்டாலிக் லைட் க்ரீன் (Metallic Light Green), 2025 ஃபசினோ (டிரம் பிரேக் மாடல்): மெட்டாலிக் ஒயிட் (Metallic White), 2025 ரேசர் ஸ்ட்ரீட் ரேலி: மேட் க்ரே மெட்டாலிக் (Matte Grey Metallic), 2025 ரேசர் (டிஸ்க் பிரேக் மாடல்): சில்வர் ஒயிட் காக்டெயில் (Silver White Cocktail)
மேம்பட்ட பவர் அசிஸ்ட் (Enhanced Power Assist): யமஹாவின் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, 'மேம்பட்ட பவர் அசிஸ்ட்' என்ற புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது அதிக செயல்திறன் கொண்ட பேட்டரியைப் பயன்படுத்தி, வண்டியை ஸ்டார்ட் செய்யும் போதும், மேடான சாலைகளில் ஏறும்போதும் கூடுதல் ஆற்றலையும், வேகத்தையும் வழங்குகிறது.
21 லிட்டர் கொள்ளளவு கொண்ட அண்டர்-சீட் ஸ்டோரேஜ், ஆன்ஸர் பேக் அம்சம், LED DRL-கள், SMG (Smart Motor Generator), எஞ்சின் ஸ்டாப்/ஸ்டார்ட் சிஸ்டம், சைலன்ட் ஸ்டார்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறன் ஆகியவை இந்த ஸ்கூட்டர்களில் உள்ளன. 125cc இன்ஜின் 8.04 bhp சக்தியையும், 10.3 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.