எஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி – ஆன்லைன் பணபரிவர்த்தனை சேவைகள் துவக்கம்

எஸ் பேங்க் வாடிக்கையாளர்கள், கிரெடிட் கார்டு மற்றும் லோன் விவகாரங்களுக்கு ஆன்லைன் பணபரிவர்த்தனை சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

By: March 11, 2020, 10:23:45 AM

எஸ் பேங்க் வாடிக்கையாளர்கள், கிரெடிட் கார்டு மற்றும் லோன் விவகாரங்களுக்கு ஆன்லைன் பணபரிவர்த்தனை சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் பேங்க் திவால் ஆனதை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி, அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. எஸ் வங்கி வாடிக்கையாளர்கள், ஏப்ரல் 6ம் தேதி வரை தங்கள் வங்கி கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமணம், உயர்கல்வி, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து ரூ.5 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எஸ் வங்கியில் நிகழ்ந்த பொருளாதார அசாதாரண சூழ்நிலைக்கு தீர்வு காணும் பொருட்டு, ரிசர்வ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முன்னாள் அதிகாரி பிரசாந்த் குமாரை நிர்வாக அதிகாரியாக நியமித்து அவர் தலைமையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

வங்கி சீரமைப்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்திற்குள் தீர்வு காணப்பட்டு விடும் என்று ரிசர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
எஸ் பேங்க் அறிவிப்பு : இதனிடையே, எஸ் பேங்க், தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தங்களது வங்கி வாடிக்கையாளர்கள், கிரெடிட் கார்டு மற்றும் லோன்களை, மற்ற வங்கி கணக்குகளிலிருந்து மேற்கொள்ளலாம். வங்கி ஏடிஎம்கள் செயல்பட துவங்கியுள்ளன. குறிப்பிட்ட அளவிலான பணத்தை, மற்ற வங்கிகளின் ஏடிஎம்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைன் பணபரிவர்த்தனை சேவைகளான IMPS/NEFT மீண்டும் துவக்கப்பட்டுள்ளன. பொறுமை காத்து ஒத்துழைப்பு நல்கிய வாடிக்கையாளர்களுக்கு நன்றி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ் வங்கி திவால் ஆனதை தொடர்ந்து, வங்கியின் இணையதள சேவைகள், டிஜிட்டல் பேமெண்ட் உள்ளிட்ட சேவைகள் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின் பேரில் அதிரடியாக நிறுத்தப்பட்டன. போரெக்ஸ் சேவைகள், கிரெடிட் கார்டு பர்சேஸ்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மும்பை பங்குவர்த்தகத்தில் கடும் சரிவை சந்தித்த எஸ் வங்கி பங்குகள், தற்போது தான் ஏற்றம் பெற துவங்கியுள்ளன.
எஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்காலம், நிர்ணயிக்கப்பட்ட கெடுவுக்கு முன்னதாக, இந்த வாரத்திற்குள்ளாகவே விலக்கிக்கொள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக எஸ் பேங்க் விசாரணை அதிகாரி பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் ராஜ்னீஷ் குமார் தெரிவித்துள்ளதாவது, எஸ் வங்கி விவகாரத்தில் தீர்வு காணும் பொருட்டு 24 மணிநேரமும் 7 நாட்களும் ஓய்வின்றி உழைத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது, எஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். வங்கி மீ்ட்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக உள்ளது. வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்களது மேலான ஆதரவை வழங்கிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Business News by following us on Twitter and Facebook

Web Title:Yes bank crisis yes bank withdrawal limit sbi to invest in yes bank

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X