Yes Bank FD interest rates | யெஸ் வங்கி குறிப்பிட்ட காலங்களுக்கு ரூ.2 கோடிக்கு கீழ் உள்ள டெபாசிட்களின் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) வரை உயர்த்தியுள்ளது.
இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, வங்கி வழக்கமான குடிமக்களுக்கு 3.25% முதல் 7.75% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
இது தொடர்பாக யெஸ் வங்கி இணையதளத்தில், மூத்த குடிமக்களுக்கு வங்கி 3.75% முதல் 8.25% வரை வழங்குகிறது. புதுப்பிக்கப்பட்ட YES பேங்க் விகிதங்கள் நவம்பர் 21, 2023 முதல் அமலுக்கு வருகின்றன” எனக் கூறப்பட்டுள்ளது.
ஆக, YES வங்கி மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட FD களில் 8 சதவீத வட்டியை வழங்குகிறது. தனியார் வங்கிகளில், இது சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது. முதலீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மூன்று ஆண்டுகளில் ரூ.1.27 லட்சமாக வளரும்.
ஆக்ஸிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட FDகளுக்கு 7.60 சதவீத வட்டியை வழங்குகிறது.
ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி
ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட FD களுக்கு 7.50 சதவீத வட்டியை வழங்குகிறது.
பெடரல் வங்கி, கனரா வங்கி
மூத்த குடிமக்களுக்கு ஃபெடரல் வங்கி மூன்று வருட FDகளுக்கு 7.10 சதவீத வட்டி வழங்குகிறது. அதேபோல், கனரா வங்கி மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட FDகளுக்கு 7.30 சதவீத வட்டி வழங்குகிறது.
முன்னணி பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் FD முதலீடு மொத்த வங்கி வைப்புத்தொகையில் 76 சதவீதம் ஆகும். சிறிய தனியார் வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகள் புதிய டெபாசிட்களைப் பெற அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“