ஜனவரி 3, 2023 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் யெஸ் பேங்க் தனது நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை மாற்றியமைத்து உள்ளது.
வழக்கமான டெபாசிட்டுகளில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலக்கெடுவில் 3.25% முதல் 7% வரையிலான FD வட்டி விகிதங்களை வங்கி இப்போது வழங்கும்
மேலும், யெஸ் வங்கி 15 மாத சிறப்பு தவணைக்காலத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மூத்த நபர்களுக்கு 7.75% மற்றும் பொது மக்களுக்கு 7.25% வட்டி விகிதம் ஜனவரி 3, 2023 முதல் நடைமுறைக்கு வருகிறது.
முன்னதாக, யெஸ் வங்கி ஒரு சிறப்பு 30 மாத FD காலத்தை வட்டி விகிதத்துடன் அறிமுகப்படுத்தியது. இதில், அனைவருக்கும் 7.50% மற்றும் மூத்த நபர்களுக்கு 8.00% வட்டி கிடைக்கும், இது டிசம்பர் 9, 2022 முதல் அமலுக்கு வந்தது.
இதற்கிடையில், அக்டோபரில், யெஸ் வங்கி 20 மாதங்கள் முதல் 22 மாதங்களுக்கும் குறைவான காலவரையறை கொண்ட சிறப்பு FDஐ அறிமுகப்படுத்தியது. இதில், வழக்கமான முதலீட்டாளர்களுக்கு 7.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டி விகிதத்துடன் வட்டி கிடைக்கும்.
மேலும், அடுத்த 7 முதல் 14 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு, யெஸ் பேங்க் 3.70% வட்டி விகிதத்தையும், அடுத்த 15 முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 3.25% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு இப்போது 4.10% வட்டி கிடைக்கும், அதே சமயம் 91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை உள்ளவைகளுக்கு இப்போது 4.75% வட்டி கிடைக்கும்.
தொடர்ந்து, 181 நாட்களில் இருந்து 271 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் இப்போது 5.75% ஆகவும், அடுத்த 272 நாட்கள் முதல் ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் இப்போது 6.00% ஆகவும் உள்ளது.
இந்நிலையில், தற்போது, யெஸ் பேங்க் 1 வருடம் முதல் 120 மாதங்கள் வரையிலான முதிர்வுகளுடன் கூடிய டெபாசிட்களை ஆண்டுக்கு 7% என்ற அதிகபட்ச நிலையான விகிதத்தில் வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/