SBI News: ஸ்டேட் பாங் ஆப் இந்தியாவின் விரிவான டிஜிட்டல் சேவை தளமான யோனோ (YONO -You Only Need One) தற்போது 2 கோடி (20 மில்லியன்) பதிவு செய்த பயனர்கள் என்ற இலக்கை தொட்டுள்ளது. வாடிக்கையாளர்களுடைய வங்கி சார்ந்த தேவைகள், பொருட்கள் வாங்குவது (Shopping), லைப்ஸ்டைல் மற்றும் முதலீடு தேவைகள் என அனைத்து விதமான தேவைகளுக்கும் ஒரே தீர்வாக இந்த மேடை அமைந்துள்ளதால், இது துவங்கப்பட்ட நவம்பர் 2017 முதல் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகத்தான புகழைப் பெற்று வருகிறது. இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே யோனோ எஸ்பிஐ 20 க்கும் அதிகமான வகைகளில் 100 க்கும் அதிகமான மின்னனு வணிக (e-Commerce) நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
பல புதிய முயற்சிகளை YONO Krishi, YONO Global, YONO Cash, YONO Shopping Festival மற்றும் இது போன்ற பலவற்றை அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் சேவை அளிக்கும் வகையில் யோனோ மூலம் எஸ்பிஐ கொண்டுவந்துள்ளது.
மேலும் படிக்க : குறைக்கப்பட்ட பி.எஃப். வட்டி விகிதம்… ஏமாற்றத்தில் தொழிலாளர்கள்!
எங்களுடைய முதன்மையான டிஜிட்டல் சேவை யோனோ புதிய உச்சத்தை தொட்டதை காண்பதில் மகிழ்ச்சி. 20 மில்லியன் (2 கோடி) பதிவு செய்யப்பட்ட பயனர்கள் என்ற மைல்கல், எங்களது வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு மற்றும் யோனோ ’வை ஏற்றுக் கொண்டதற்கான ஒரு சான்றாகும், என யோனோ -எஸ்பிஐ யின் சாதனை குறித்து எஸ்பிஐ யின் தலைவர் Rajnish Kumar தெரிவித்துள்ளார்.
யோனோ எஸ்பிஐ ஆரம்பிக்கப்பட்ட பிறகு, இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக வங்கியான எஸ்பிஐ, உத்தேசமாக 4,000 கடன்கள் ஒரு நாளுக்கு என்ற அடிப்படையில் ரூபாய் 11,530.70/- கோடி அளவுக்கு 8.70 லட்சம் முன் அங்கீகரிக்கப்பட்ட தனி நபர் கடன்களை யோனோ எஸ்பிஐ யில் வழங்கியுள்ளது. மேலும் 3.4 லட்சம் YONO Krishi Agri தங்க கடன்களை இது வரை விவசாய வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
இதுமட்டுமல்லாது 6.8 மில்லியன் சேமிப்பு கணக்குகளை யோனோ ஆப்பில் யோனோ எஸ்பிஐ துவங்கியுள்ளது. மேலும் யோனோ எஸ்பிஐ மூலமாக வங்கி ஒவ்வொரு நாளும் 20,000 கணக்குகளை துவங்குகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.