/tamil-ie/media/media_files/uploads/2022/10/Aadhaar_1663131710868_1663131711086_1663131711086.jpg)
ஆதார் கார்டு புதுப்பித்தல்
Bank balance using Aadhaar card: ஆதார் கைரேகைகள், புகைப்படங்கள் மற்றும் கருவிழி ஸ்கேன் போன்ற பல தனிப்பட்ட விவரங்களைக் கொண்டிருக்கிறது. இதனால், பயனர்களுக்கு குறிப்பிடத்தக்க அடையாளக் கருவியாக ஆதார் மாறியுள்ளது.
மேலும், ஒருவரின் வங்கிக் கணக்குகள், வாகனங்கள், ஓட்டுநர் உரிமங்கள், காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் பிற முக்கிய சேவைகளுடன் இந்த அட்டை இணைக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தின் அடிப்படையில், தனிநபர்கள் இப்போது தங்கள் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி இணைய இணைப்பு இல்லாமல் தங்கள் தொலைபேசிகளில் தங்கள் வங்கி இருப்பை சரிபார்க்கலாம்.
ஸ்மார்ட்ஃபோன் இல்லாத மற்றும் இணைய வசதி இல்லாத மூத்த குடிமக்களுக்கு இந்தப் புதிய சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அவர்களின் சம்பளக் கணக்கு விவரங்கள் அல்லது ஆதார் அட்டையுடன் ஏதேனும் வங்கிக் கணக்கு இருப்பை சரிபார்க்க, ஒருவர் முதலில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கிய 12 இலக்க எண்ணை அவர்களின் வங்கி விவரங்கள் மற்றும் மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும்.
வங்கி இருப்பை சரிபார்க்க..
1) ஆதார் அட்டை மற்றும் வங்கி விவரங்களை இணைத்த பிறகு, ஒருவர் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9999*1# டயல் செய்ய வேண்டும்.
2) அடுத்து 12 இலக்க எண்ணை உள்ளீட வேண்டும்.
3) மீண்டும் ஒருமுறை ஆதார் எணணை உறுதி செய்துக் கொள்ளல் வேண்டும்.
4) உங்களது வங்கி கணக்கு இருப்பு செல்போன் திரையில் தோன்றும்.
எதிர்காலத்தில், UIDAI ஆதார் தகவலைப் புதுப்பித்தல், கார்டுடன் தொலைபேசி எண்ணை இணைப்பது, புகைப்படங்களைப் புதுப்பித்தல் மற்றும் பிற சேவைகளை வழங்கும்.
இந்தச் சேவையானது கார்டுதாரர்கள் ஆதார் சேவா கேந்திராவிற்குச் சென்று நீண்ட வரிசையில் நின்று தங்கள் கார்டுகளைப் புதுப்பிக்க வேண்டிய தேவையை நீக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.