அஞ்சலக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் 1,2,3,5 ஆண்டுகள் என முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் கூட்டுக் கணக்கை தொடங்கும் வசதியும் உள்ளது.
இதில் குறைந்தப்பட்ச முதலீடு ரூ.1000 ஆகும். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெயரில் அவர்களின் பெற்றோர் கணக்கை தொடங்கலாம். இத்திட்டத்தில், 6.9 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை வட்டியும் கிடைக்கும்.
வட்டி விகிதம்
ஒரு வருடத்திற்கு போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்டில் பணத்தை முதலீடு செய்தால், 6.9 சதவீத வட்டி கிடைக்கும். இரண்டு வருடங்கள் முதலீடு செய்தால் 7 சதவீத வட்டி கிடைக்கும்.
மூன்று ஆண்டுகளுக்கு பணத்தை முதலீடு செய்தால், முதலீட்டாளருக்கு 7.1 சதவீத வட்டியும், ஐந்து வருட கால வைப்புத்தொகைக்கு 7.5 சதவீத வட்டியும் வழங்கப்படும்.
வரி விலக்கு
அஞ்சல் அலுவலகத்தில் 5 ஆண்டுகள் கால வைப்புத் தொகையில் முதலீடு செய்யப்படும் தொகையும் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கின் பலனைப் பெறுகிறது.
5 ஆண்டுகளுக்கும் குறைவான காலவரையறை கொண்ட வைப்புகளுக்கு வரிச் சலுகைகள் கிடைக்காது. கால வைப்பு முதிர்வுக்கு முன்பே பணத்தை திரும்பப் பெறலாம், ஆனால் அபராதக் கட்டணம் செலுத்த நேரிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“