வருமான வரி சேமிப்பில் புதிய வரி முறையின் கீழ் ரூ.7 லட்சம் வரை விலக்கு வரம்பை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. அதேசமயம் பழைய வரி முறையின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்தில் வரியைச் சேமிக்க, பழைய வரி முறையின் விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பழைய வரி முறையின் கீழ் வெவ்வேறு வரி அடுக்குகள் உள்ளன. பழைய வரி விதிப்பின்படி, ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வரை வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை.
2.5-5 லட்சம் வருமானத்திற்கு 5% வரி விதிப்பு உள்ளது. அதேசமயம் ஆண்டு வருமானம் 5-10 லட்சம் ரூபாய்க்கு 20% வரி விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், ஆண்டு வருமானம் 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் 30% வரி ஸ்லாப் உள்ளது.
உங்கள் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சமாக இருந்தால், நீங்கள் 30 சதவீத வரி செலுத்த வேண்டும். இருப்பினும், நீங்கள் விரும்பினால், நீங்கள் ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டியதில்லை. சில முதலீடுகள் மற்றும் விலக்குகளைப் பயன்படுத்தி முழு வரியையும் சேமிக்கலாம்.
அந்த முதலீடுகள் மற்றும் வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.
- நிலையான விலக்காக 50 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், இப்போது ரூ.9.50 லட்சத்திற்கு வரி விதிக்கப்படும்.
- தொடர்ந்து, பி.பி.எஃப்,இ.பி.எஃப், இ.எல்.எஸ்.எஸ், என்.எஸ்.சி போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரியை சேமிக்கலாம்.
- தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) நீங்கள் ஆண்டுக்கு ரூ. 50,000 வரை முதலீடு செய்தால், பிரிவு 80CCD (1B)-ன் கீழ் உங்களுக்கு ரூ. 50,000 கூடுதல் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த, 50 ஆயிரம் ரூபாய் கழித்தால் ரூ.7.50 லட்சத்துக்கு வரி விதிக்கப்படும்.
- நீங்கள் வீட்டுக் கடனையும் எடுத்திருந்தால், வருமான வரியின் 24பி பிரிவின் கீழ் அதன் வட்டியில் ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம். 7.50 லட்சத்தில் இருந்து 2 லட்சத்தைக் கழித்தால், மொத்த வரிவிதிப்பு வருமானம் 5.50 லட்சமாக இருக்கும்.
- வருமான வரி பிரிவு 80டியின் கீழ் மருத்துவ பாலிசி எடுப்பதன் மூலம் 25 ஆயிரம் ரூபாய் வரை வரியைச் சேமிக்கலாம். இந்த உடல்நலக் காப்பீட்டில் உங்கள் பெயர், உங்கள் மனைவியின் பெயர் மற்றும் உங்கள் குழந்தைகளின் பெயர் இருக்க வேண்டும். இது தவிர, உங்கள் பெற்றோரின் பெயரில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் வாங்குவதன் மூலம் 50,000 ரூபாய் வரை கூடுதல் விலக்கு பெறலாம்.
- அத்தகைய சூழ்நிலையில், 5.50 லட்சத்தில் இருந்து 75 ஆயிரத்தைக் கழித்தால், மொத்த வரிப் பொறுப்பு 4.75 லட்சமாக இருக்கும், இது பழைய வரி விதிப்பு வரம்பான 5 லட்சம் ரூபாய்க்குக் கீழே இருக்கும். அதாவது ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு ஒரு ரூபாய் கூட வரி கட்ட வேண்டியதில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“