பெண்களை முதலீடு செய்ய ஊக்குவிக்கும் வகையில் 2023 பட்ஜெட்டில் பெண்களுக்கான சேமிப்புத் திட்டமான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார்.
வட்டி
அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு 7.5 சதவீத நிலையான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. வட்டியானது காலாண்டுக்கு ஒருமுறை கூட்டப்பட்டு கணக்கில் வரவு வைக்கப்படும்.
திட்டத்தின் காலம்
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழின் காலம் 2 ஆண்டுகள் ஆகும். பதின்ம சிறுமிகள் பாதுகாவலர் ஒருவரை நியமித்து இந்தக் கணக்கை தொடங்கலாம்.
முதலீடு
இந்தத் திட்டத்தில் குறைந்தப்பட்சம் ரூ.1000 முதல் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
பொதுத்றை, தனியார் வங்கிகள்
அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி உள்ளிட்டவற்றில் இந்தக் கணக்குளை திறந்துக்கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“