/tamil-ie/media/media_files/uploads/2017/07/Money.jpg)
இன்றைய தலைமுறையினர், செலவிடுவதை விட சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 21 நூற்றாண்டு இளைஞர்கள் தங்கள் பண தேவையை ஆரோக்கியமான வழியில் நடத்தி செல்கின்றனர்.
அந்த வகையில், இவர்களின் சேமிப்பு பணி மிகவும் பாரட்டுக்குரிய ஒன்றுதான். தங்களின் வருங்காலங்கள் பண தேவையில் எப்படி அமைய வேண்டும் என்ற தெளிவான ஒரு திட்டத்துடன் இன்றைய தலைமுறையினர் முன்னோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். அந்த வகையில் அவர்களின் சேமிப்பு திட்டம் மற்றும் விரைவில் பணக்காரர் ஆக சூப்பரான 5 திட்டங்கள்.
1. முதலீடு:
முதலீட்டை வளர்ச்சிக்கு ஏற்றவாறு பிரித்து முதலீடு செய்ய வேண்டும். ரே மாதிரியான முதலீட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வங்கி டெபாசிட், அஞ்சல் சேமிப்பு வழியை தவிர மற்ற சேமிப்பு வழிமுறைகள் பற்றியும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
2. பட்ஜெட்:
வருமானத்திற்கு ஏற்றவாறு பட்ஜெட் வைத்திருத்தல் வேண்டும். செலவினைக் குறைக்க முடியுமோ, அதனைக் குறைத்து நிதித் திட்டமிடல் செய்ய வேண்டும்.
3. பாதுகாப்பு காப்பீடு:
காப்பீடு மிக முக்கியம். எந்த காப்பீடாக இருந்தாலும் அந்த தொகை கண்டிப்பாக நமக்கு ஏதாவது ஒரு வகையில் உதவும். வருமானத்துக்கு ஏற்ப காப்பீடு எடுத்து வைக்க வேண்டும்.
4.நிதி இலக்கு:
வருமானத்தி லிருந்து சேமித்து வைத்து, பிற்காலத்தில் எந்த நிலைமைக்கு உயரப் போகிறோம் என்பதனை திட்டமிட்டு, அதற்காக நிதித் திட்டம் ஒன்றை வகுத்து, அவ்வாறு செயல்படுவது ,மிகுந்த நன்மையை தரும். நிதித் திட்டமிடுதலில் சேமிக்கும் காலம், சேமிக்கும் தொகை, வட்டி விகிதம் ஆகிய மூன்றும் முக்கியமானதாகும்.
5. கடன்:
ஆரம்பத்தில் கடனுக்காக நீங்கள் செலுத்தும் மாதத் தவணையில் சிறு தொகையாவது சேர்த்துச் செலுத்தினால் கடனை விரைவாக அடைத்து, கடனினால் உங்கள் பணம் விரையமாவதை கட்டுப் படுத்தாலாம். லாபத்தைத் தவிர, வட்டி மீதும் வட்டி கிடைக்கும். சீரான முதலீட்டை நீண்டகால அளவில் செய்தால், கூட்டு வட்டியினால் நல்ல பயன் பெறலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.