முதலீட்டாளர்கள் தங்களுக்கான செல்வத்தை உருவாக்குவதற்கு சில விதிக்ள உள்ளன. இதன் பொருள் உங்கள் பணம் வேகமாக வளர வேண்டும். இதற்கு நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான கொள்கை முதலீடு.
அந்த வகையில், கடந்த ஒரு தசாப்தத்தில் 17.75 சதவீத வருடாந்திர வருமானத்தை வழங்கிய மதிப்பு நிதியின் விவரங்கள் பற்றி பார்க்கலாம்.
நிப்பான் இந்தியா வேல்யூ ஃபண்ட் கடந்த 10 ஆண்டுகளில் 17.75 சதவீத வருடாந்திர வருமானத்தை வழங்கியுள்ளது. பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ் (நிஃப்டி 500 டிஆர்ஐ) அதே காலகட்டத்தில் இதை விடக் குறைவாக திரும்பி 15.20 சதவீதமாக இருந்தது. இது ₹5,763 கோடி நிர்வாகத்தின் கீழ் (AUMs) மொத்த சொத்துகளைக் கொண்ட பிரபலமான நிதியாகும்.
இதில் ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் முதலீடு செய்தால் முதலாண்டு ரூ.122750 கிடைக்கும். இது மூன்றாம் ஆண்டு ரூ.2,11, 193 ஆகவும், 5ஆம் ஆண்டில் ரூ.2,32,778 ஆகவும் 10 ஆண்டுகளில் 5,12,400 ஆகவும் இருக்கும்.
முதல் ஆண்டு வட்டி விகிதம் 22.75 சதவீதம் ஆகவும், 3ஆம் ஆண்டு 28.30 சதவீதம் ஆகவும், 5ஆம் ஆண்டு வட்டி விகிதம் 18.41 ஆகவும் 10 ஆண்டு வட்டி விகிதம் 17.75 ஆகவும் காணப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“