/tamil-ie/media/media_files/uploads/2020/11/maxresdefault-36.jpg)
sbi account sbi sbi savings sbi
zero balance account zero aaccount balance : ஓவர் டிராஃப்ட் வசதி குறுகிய கால கடனைப் (Short term loan) போன்றது. இதன் மூலம் கணக்கு வைத்திருப்பவர் தனது கணக்கில் பணம் இல்லாதபோது அல்லது முற்றிலும் பூஜ்ஜியம் என்ற அளவில் இருப்பு இருக்கும்போது கூட தனது கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும்.
ஏறக்குறைய அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும் ஓவர் டிராஃப்ட் வசதி உள்ளது. பெரும்பாலான வங்கிகளில், இந்த வசதி நடப்புக் கணக்கு ( Current account), சம்பளக் கணக்கு (Salary account) அல்லது நிலையான வைப்புத்தொகையில் (FD) கிடைக்கிறது. சில வங்கிகளில், பங்குகள், பத்திரங்கள், காப்பீடு, வீடு, சொத்து போன்றவற்றின் அடிப்படையிலும் ஓவர்டிராப்ட் வசதி கிடைக்கிறது.
வங்கிக் கணக்கில் ஜீரோ பேலன்ஸ், அதாவது பணம் இல்லை என்றாலும், கணக்கில் இருந்து பணம் எடுக்கலாம்.
அவசர நேரத்தில் பணத்தின் தேவை ஏற்படும் போது, வேறு எங்காவது கடன் வாங்குவதை போலவே வங்கியில், இதற்காக விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஓவர் ட்ராஃப் வசதி சம்பளம் மற்றும் நடப்புக் கணக்கு உள்ளவர்களுக்கு கொஞ்சம் எளிதாக கிடைக்கும்.
மாதத்தின் கடைசி நாளில் பணம் இல்லாமல் போனால், அல்லது திடீரென பணம் தேவைப்படும் நேரத்தில் வங்கிகளின் ஓவர் டிராஃப்ட் (Overdraft) வசதி சிறந்த வகையில் கை கொடுக்கும். இது வங்கிகளால் (Bank) வழங்கப்படும் ஒரு வசதி, இதைப் பற்றி மக்களுக்கு அதிகம் தெரிவதில்லை. அதைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.