scorecardresearch

ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் தொடங்கணுமா? சிறந்த வட்டி தரும் வங்கிகள் இதுதான்!

ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

savings account interest bank savings account

சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிப்பது பலருக்கு கஷ்டமாக இருக்கும். சில வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு தொகையாக 10,000 ரூபாய் வரை வைத்திருக்க கூறுகின்றன. சில நேரங்களில் நம்மால் அதனை வைத்திருக்க முடியாத நிலை வரும். அங்கு அவர்கள் அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் மக்களுக்கு ஒரு சிறந்த வழி, வங்கியில் ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கைத் திறப்பதுதான்.

ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மேலும் வழக்கமான சேமிப்பு கணக்குடன் ஒப்பிடும்போது, ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டும் கிட்டதட்ட அனைத்து சேவைகளையும் வழங்கி வருகின்றன. ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கை வழங்கும் வங்கிகள் எவை என பார்க்கலாம்.

ஐடிஎஃப்சி வங்கி

கணக்கின் பெயர்- பிரதம் சேமிப்பு கணக்கு
வட்டி விகிதம்- 4.00%
தினசரி ஏடிஎமில் பணம் எடுப்பதற்கான வரம்பு- ரூ .40,000
வேறு எந்த வங்கியிலும் சேமிப்புக் கணக்கு இல்லாதவர்கள் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். இது 2 லட்ச ரூபாய் தனிப்பட்ட விபத்து காப்பீட்டுத் தொகையையும் வழங்குகிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா</strong>

கணக்கின் பெயர்- பேசிக் சேவிங்க்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட்
வட்டி விகிதம்- 2.70%
கணக்கு இருப்புக்கு மேல் வரம்பு இல்லை
KYC க்கு தேவையான அனைத்து ஆவணங்களும் இருந்தால் இந்த வகை கணக்கை எந்த ஒரு நபரும் திறக்கலாம். இந்தக் கணக்கிற்கான அடிப்படை ரூபே ஏடிஎம்-கம்-டெபிட் கார்டு வழங்கப்படும்.

யெஸ் வங்கி

கணக்கின் பெயர்- ஸ்மார்ட் சம்பள அட்வான்டேஜ் கணக்கு
வட்டி விகிதம் -4.00%
YES வங்கியில் இந்த வகை கணக்கைத் தொடங்க சம்பளம் பெறும் நபர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்
ரூ .75,000 வரை பணம் எடுக்கும் வகையில் டெபிட் கார்டு வழங்கப்படும். உங்களது மொபைல் பேங்கிங் அல்லது நெட் பேங்கிங்கில் அன்லிமிடெட் நெஃப்ட் மற்றும் RTGS சேவையினை செய்து கொள்ள முடியும். அதோடு பலவிதமான சலுகைகளுடன் டைட்டானியம் டெபிட் கார்டு வழங்கப்படுகிறது.

ஹெச்டிஎஃப்சி வங்கி

ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கு பெயர்- அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (BSBDA)
வட்டி விகிதம் -3%
கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம் கம் டெபிட் கார்டு, இலவச பாஸ் புக் சேவை, இலவச டெபாசிட், திரும்பப் பெறுதல் மற்றும் காசோலை புத்தகம், மின்னஞ்சல் அறிக்கை, கோரிக்கை வரைவு போன்ற இலவச வசதிகள் கிடைக்கும். வேறு எந்த வங்கியிலும் மற்றொரு சேமிப்பு அல்லது சம்பள கணக்கு வைத்திருக்கும் ஒருவரால் இந்தக் கணக்கைத் திறக்க முடியாது.

கோடக் மஹிந்திரா வங்கி

ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கு பெயர்- 811 டிஜிட்டல் வங்கி கணக்கு
வட்டி விகிதம்-3.50%
கோடக் வங்கியின் இந்த கணக்கை டிஜிட்டல் வங்கி மூலம் திறக்கலாம். இதில் நீங்கள் 811 மெய்நிகர் டெபிட் கார்டைப் பெறுவீர்கள். நீங்கள் அதை ஆன்லைன் ஷாப்பிங்கில் பயன்படுத்தலாம்.

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி

ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கு பெயர்- ஆசான்/ BSBDA
வட்டி விகிதம்- 2.75%
ஆதார் அடிப்படையிலான eKYC மூலம் கணக்கைத் தொடங்கலாம்.
இந்த கணக்கு இலவச NEFT/RTGS பரிவர்த்தனைகளையும் வழங்குகிறது.

இந்தஸ்இந்த் பேங்க்

ஜீரோ பேலன்ஸ் கணக்கின் பெயர் – இந்தஸ் ஆன்லைன் சேமிப்பு கணக்கு
வட்டி விகிதம்-4%
இந்த வகை கணக்கைத் திறக்க, மொபைல் நம்பர் இணைக்கப்பட்ட ஆதார் எண் மற்றும் பான் எண்ணை வைத்திருக்க வேண்டும்.
இந்தக் கணக்கைத் திறப்பவர்களுக்கு தனிப்பட்ட விபத்து காப்பீடு ரூ.2 லட்சத்துடன் பிளாட்டினம் பிளஸ் டெபிட் கார்டு கிடைக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Zero balance savings account these bank offers best interest rate