இந்திய தபால் துறை, நாடு முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையத்தைக் கொண்டுள்ளது.இந்திய தபால் நிலையங்கள், சேமிப்பு கணக்கு மற்றும் நிலையான வைப்பு ஆகியவற்றை வெகுவாக செயல்படுத்தி வங்கிகளாக செயல்படத் தொடங்கிவிட்டது.
இந்திய அரசாங்கத்தின் சிறு சேமிப்புத் திட்டங்களாக, தபால் நிலையத்தில் 9 விதமான முதலீட்டு முறைகள் உள்ளன.சேமிப்பு கணக்கு, தேசிய சேமிப்பு கால வைப்பு கணக்கு (Recurring Deposit Account), தேசிய சேமிப்பு வைப்புக் கணக்கு, தேசிய சேமிப்பு மாத வருமானம் கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்புதிட்டக் கணக்கு, பொது வட்டி சேமிப்பு கணக்கு, தேசிய சேமிப்பு சான்றிதழ்கல் கணக்கு மற்றும்கிசான் விகாஸ் பத்திர கணக்கு ம்ற்றும் சுகன்யா சம்ரிதி கணக்கு என 9 கணக்கு வகைகள்உள்ளன.
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் இந்திய அஞ்சல் அலுவலம், கணக்குகளை வழங்குகிறது. இது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி மூலம் நிர்வகிக்கப்படும் தன்னார்வ ஓய்வூதிய திட்டமாகும்.
தபால் அலுவலக சேமிப்பு வட்டி விகிதங்கள் :
தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் ஆண்டுக்கு 4 சதவீதம் என்ற விகிதத்தில் வட்டி
வழங்குகிறது.
சேமிப்பு கணக்கு முதலீடு/ குறைந்தபட்ச இருப்பு தொகை :
குறைந்த பட்ச இருப்புத் தொகை ரூ.20 ,அஞ்சல் அலுவலகம் சேமிப்பு கணக்கில் இருக்க
வேண்டும். அஞ்சல் அலுவலகத்தின் காசோலை புத்தக வசதியுடன் சந்தா இல்லாமல் ஒரு சேமிப்பு கணக்கிற்கு குறைந்தபட்ச இருப்பு ரூ.50 மட்டுமே. காசோலை வசதி
வேண்டுமென்றால் ரூ.500 ஐ குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டியது
அவசியம்.
இந்திய அஞ்சலகத்தின் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு :
இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது சேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு வங்கி கணக்கு சேவையை வழங்குகிறது. பணப் பரிமாற்றம் மற்றும் நேரடி பயன் பரிமாற்ற சேவைகள், பிற கட்டணங்களை செலுத்தும் சேவையை வழங்குகிறது.
இந்திய அஞ்சலகத்தின் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்குசேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு வங்கி கணக்கு சேவையை இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ்வங்கி வழங்குகிறது. பணப் பரிமாற்றம் மற்றும் நேரடி பயன் பரிமாற்ற சேவைகள், பிறகட்டணங்களை செலுத்தும் சேவையை வழங்குகிறது.
மேலும் இந்திய அஞ்சல் பணமளிப்பு வங்கி வழக்கமான கணக்கு, டிஜிட்டல் மற்றும்
அடிப்படையான என்று 3 விதமான கணக்கினை வழங்குகிறது. இந்த கணக்கில் குறைந்த பட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு மாதம்
சராசரியாக ரூ.1000 ஐ இருப்பாக வைத்திருக்க வேண்டும். சிறுசேமிப்புக் கணக்கிற்கும் வட்டி விகிதங்கள் பொருந்தும். 9விதமான சேமிப்பு திட்டங்களுக்கு 7 சதவீதம் முதல் 8.7 சதவீதம் வரை வழங்குகின்றன.
வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எஸ்பிஐ!
நிலை வைப்புக் கணக்குகள் ஒரு ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம் என்று இந்திய தபால் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களுக்கு வருமான வரி விலக்கு உண்டா? என்றால் ஆம்,உண்டு.
இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்கில் தொடங்கி சேமித்து வரும் கணக்குகள் இந்திய வருமான வரிச் சட்டத்தின் 80சி இன் கீழ் வரி விலக்கு உண்டு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.