எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு செம சான்ஸ்..உங்களுக்காகவே 3 புதிய திட்டங்கள்!

SBI Zero Minimum Balance Savings Account: ஏழை மக்கள் பயன்பெற தொடங்கப்பட்ட கணக்கு பேசிக் சேமிப்பு கணக்கு ஆகும்

SBI Zero Balance Account: Salary Account, Basic Saving Account & Small Deposit Account: எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி உங்களுக்கு மினிமம் பேலன்ஸ் குறித்து கவலை வேண்டாம். காரணம், இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுக்காக 3 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்து அதனை செயல்படுத்தி வருகிறது. பாரத் ஸ்டேட் வங்கியின் அந்த ஸீரோ பேலன்ஸ் திட்டங்கள் எவை? என்பதை இந்தக் கட்டுரை வாசகர்களுக்கு விளக்குகிறது.

எஸ்பிஐ, ஐசிஐசிஐ,  எச்டிஎப் போன்ற முன்னணி வங்கிகளில் அக்கவுண்ட் தொடருபவர்களுக்கு இருக்கும் பெரும் கவலையே மினிமம் பேலன்ஸ் குறித்து தான்.   குறிப்பிட்ட தொகையை மினிமல் பேலன்ஸாக வைத்திருக்கவில்லை என்றால் அவர்களிடம்  இழப்பீடு தொகையும் வசூலிக்கப்படுகிறது.

இந்த கவலையை வாடிக்கையாளர்களுக்கு போக்கும் வகையில் எஸ்பிஐ வங்கி 3  ஜீரோ பேலன்ஸ் திட்டங்களை நடைமுறையில் வைத்துள்ளது.  இந்த திட்டங்களில் மற்ற கேமிப்பு கணக்குக்களுக்கான அதே வட்டி விகிதம் அளிக்கப்படுவது கூடுதல் தகவல்.

Read More: ஆன்லைனில் அடிக்கடி பணம் அனுப்புபவரா நீங்கள்? வங்கிகள் உங்களிடம் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு?

SBI Zero Balance Account: அந்த 3 திட்டங்கள் என்னென்ன தெரிந்துக் கொள்வோமா?

1. சேலரி அக்கவுண்ட் :

நீங்கள் பணிப்புரியும் அலுவலகத்தில் மாத சம்பளம் வழங்க தொடங்கப்படும்  சேலரி அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸ் பிரச்சனை கிடையாது. மேலும், இலவச ஆன்லைன் பேங்கிங், ஏ.டி.எம் கார்ட், ஜாயின்ட் அக்கவுன்ட்டுக்கு கூடுதல் ஏ.டி.எம் கார்டு, எஸ்.பி.ஐ பவர் வசதி, இலவச கசோலைகள் வழங்கப்படும்.

தொடர்ந்து 3 மாதங்கள் ஊதியம் கணக்கில் டெபாசிட் ஆகவில்லை என்றால், இந்த கணக்குக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு சலுகைகள் திரும்பப் பெறப்படும்.

2. பேசிக் சேமிப்பு கணக்கு:

ஏழை மக்கள் பயன்பெற தொடங்கப்பட்ட கணக்கு பேசிக் சேமிப்பு கணக்கு ஆகும். இதில் அக்கவுண்ட் வைத்துக்கொள்ள நீங்கள் கே.ஒய்.சி சான்றுகளை வழங்க வேண்டும். இந்த கணக்கை தொடங்குவோருக்கு இலவசமாக ரூ-பே ஏ.டி.எம் கார்டு வழங்கப்படும்.  NEFT/RTGS சேவை மூலம் கட்டணம் இன்றி பணம் அனுப்பவும் பெறவும் முடியும். மினிமம் பேலன்ஸ் பிரச்சனை அறவே இல்லை

இந்த கணக்கு திறக்க நினைப்பவர்களுக்கு, வேறு சேமிப்பு கணக்குகள் இருக்கக் கூடாது. அப்படியே இருந்தால் 30 நாட்களுக்குள் அதை மூட வேண்டும்.

3. சிறிய டெபாசிட் கணக்குகள்:

கே.ஒய்.சி சான்றுகள் இல்லாத 18 வயதுக்கு மேற்பட்டோர் இந்த கணக்கை தொடங்கலாம். ஆனால் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. கே.ஒய்.சி சான்றுகள் சமர்ப்பித்த பிறகு பேசிக் சேமிப்பு கணக்காக மாற்றிக் கொள்ளலாம். இதுவும் ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட் தான்ன். ஆனால் அதிகபட்சமாக 50 ஆயிரம் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close