உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, அண்மையில் அறிவித்த 10 நிமிட டெலிவரி திட்டத்தை சென்னையில் அறிமுகப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்து காவல் அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் சொமேட்டோ அதிகரிகள் 10 நிமிட டெலிவரி திட்டம் கைவிடப்படுவதாக தெரிவித்தனர். மேலும், சொமேட்டோ இன்ஸ்டண்ட் திட்டத்தை அறிமுகம் செய்ய நினைத்தால், சென்னை நகர காவல்துறையின் முன் அறிவுறுத்தல் மற்றும் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
சொமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல், சொமேட்டோ இன்ஸ்டண்ட் திட்டம் இந்தியாவில் பல நகரங்களில் உணவுகள் 10 நிமிடத்தில் டெலிவரி செய்யப்படும் என அறிவித்திருந்தார். இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன
இதையடுத்து, இந்த திட்டத்தின் விரிவான தகவலை அறிய சொமேட்டோ அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என சென்னை மாநகர காவல் துறை தெரிவித்திருந்தது.
சனிக்கிழமை அன்று, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்து காவலர்கள் மீட்டிங்கை ஏற்பாடு செய்திருந்தனர்.
போக்குவரத்துத்துறையின் கூடுதல் ஆணையர் கபில் குமார் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில் சொமேட்டோ, ஸ்விகி உள்ளிட்ட உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில் உணவு டெலிவரி செய்யும் நபர்கள் போக்குவரத்து விதிகளை மீறுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil