கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஆர்டர்கள் மீது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கிய உணவு விநியோக நிறுவனமான சொமாட்டோ மார்ச் வரை புதிய வரியின் மூலம் 83 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் தெரியவந்துள்ளது.
ப்ளாட்ஃபார்ம் கட்டணம் சொமேட்டோவின் சரிசெய்யப்பட்ட வருவாயை இயக்கும் மூன்று முக்கிய காரணிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 27 சதவீதம் அதிகரித்து இந்தாண்டில் ரூ.7,792 கோடியாக உள்ளது.
"சரிசெய்யப்பட்ட வருவாய் GOV-ன் (மொத்த ஆர்டர் மதிப்பு) சதவீதம், முதன்மையாக உணவக கமிஷன் டேக்-ரேட் அதிகரிப்பு, விளம்பர பணமாக்குதலில் முன்னேற்றம் மற்றும் Q2FY24 முதல் இயங்குதளக் கட்டணத்தை அறிமுகப்படுத்தியதன் காரணமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது" என்று அறிக்கை கூறியது.
சுவாரஸ்யமாக, கடந்த நிதியாண்டில் பெரும்பாலான இரவு நேர ஆர்டர்கள் டெல்லி NCR-ல் இருந்து அதிகம் வந்துள்ளன, அதே நேரத்தில் பெரும்பாலான காலை உணவு ஆர்டர்கள் பெங்களூருவிலிருந்து வந்ததாக சொமேட்டோ அறிக்கையில் பகிர்ந்துள்ளது.
சொமேட்டோ நிறுவனம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஒரு ஆர்டருக்கு பிளாட்ஃபார்ம் கட்டணமாக ரூ.2 வசூலிக்கத் தொடங்கியது, இது படிப்படியாக இப்போது முக்கிய சந்தைகளில் ரூ.6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் முக்கிய போட்டியாளரான ஸ்விக்கியும் அதன் ஆர்டர்களில் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை வசூலிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“