சொமேட்டோ நிறுவனம் “ப்யூர் வெஜ் மோட்” (Pure Veg Mode) சேவை என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்நிறுவனத்தின் சி.இ.ஓ தீபிந்தர் கோயல் இன்று (புதன்கிழமை) அந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
சொமேட்டோ நிறுவனம் நேற்று Pure Veg Mode சேவை என்ற பெயரில் சைவ உணவுக்கென தனி அணியை உருவாக்குவதாக அறிவித்தது. அதில் சைவ உணவுகளை டெலிவரி செய்ய தனி ஊழியர்கள், அவர்களுக்கு பச்சை நிற சீருடை மற்றும் பச்சை நிற பை வழங்கப்படும் எனக் கூறி அறிமுகம் செய்தது.
முழுக்க முழுக்க சைவ உணவகம், சைவ உணவு மட்டுமே இவர்கள் டெலிவரி செய்வார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் கலவையான விமர்சனம் எழுந்தது. இது ஏற்கனவே ஆங்காங்கே நிகழும் தீண்டாமையையும், பாகுபாட்டையும் அதிகரிப்பாக கூறினர். ஒரு சிலர் இது சைவ உணவு உண்பர்கள் பயனடைய மிகவும் எளிதாக இருக்கும் என்றும் கூறி வந்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/business/companies/zomato-rolls-back-green-uniform-veg-fleet-ceo-deepinder-goyal-9223809/
இந்நிலையில், புதிய திட்டமான “ப்யூர் வெஜ் மோட்” சேவையை திரும்ப பெறுவதாக கோயல் இன்று X தளத்தில் அறிவித்தார். அனைவரும் இனி சிவப்பு நிற சீருடையே அணிவர். ஆனால் சைவ உணவுகள் தனியாகவே டெலிவரி செய்யப்படும். டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“