நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கில் நீதிபதியை அணுகியதாக ஐசரி கணேஷ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு. தனது செய்கைக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக ஐசரி கணேஷ் மனுத்தாக்கல்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரி விஷால் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஜூன் 22 ஆம் தேதி விசாரித்தார்.
அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கூடாது என்பதற்காக அத்தேர்தலில் போட்டியிட்ட ஐசரி கணேசன், வழக்கறிஞர் அனந்தராமன் என்ற நபர் மூலம் நீதிபதியை அணுகி நீதிமன்ற விசாரணையில் தலையிட்டார் என குற்றம்சாட்டு எழுந்தது.
இவ்வாறு நீதிமன்ற விசாரணையில் தலையீட்ட காரணத்தால் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வு முன், இன்று ஐசரி கணேஷ், அனந்தராமன் ஆகியோர் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக பதில் மனுத்தாக்கல் செய்தனர்.
வழக்கறிஞர் அனந்தராமன் என்பவர் தாக்கல் செய்த பதில் மனுவில், ஐசரி கணேஷ் தாக்கல் செய்துள்ள அதில் தனக்கும் இந்த நிகழ்விற்கும் தொடர்பில்லை என்றும் அனந்த ராமன் என்பவர் தன் பெயரை பயன்படுத்தியதாகவும் அவர் தன் பெயரைப் பயன்படுத்தி தனக்கு தெரியாது என்றும் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் தாமாக முன் வந்து சட்டப்பணிகள் ஆணையத்துக்கு ரூ.10 லட்சம் வழங்குவதாக ஐசரி கணேஷ் தரப்பில் உறுதி அளிக்கபட்டது.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஐசரி கணேஷ் 10 லட்ச ரூபாயை சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இரண்டு வாரங்களில் செலுத்த வேண்டும். அத்தொகையை சட்டப்பணிகள் ஆணைக்குழு திருநங்கைகள், கைவிடப்பட்ட குழந்தைகள் நலனுக்கான பயன்படுத்த உத்தரவிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.