Board Exam Dates Tamil News : 2020-ம் ஆண்டு மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதளவு பாதிப்படையச் செய்தது. குறிப்பாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. கோவிட் -19 பரவல் காரணமாக 2020-21 கல்வியாண்டை 'பூஜ்ஜிய கல்வி ஆண்டு' என்று அறிவித்த பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடைபெறும் என்று கடந்த திங்கட்கிழமை தெரிவித்தார்.
தேர்வுகள் மற்றும் வகுப்புகள் உட்பட எந்தவொரு கல்வி நடவடிக்கைகளும் நடத்தப்படாத ஆண்டுதான் பூஜ்ஜிய கல்வி ஆண்டு. தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்த கல்வியாண்டிற்கான முழுமையான விடுமுறையை அறிவிக்க மாநில அரசு பரிசீலித்து வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், பொது தேர்வுகளுக்கான அட்டவணையை விரைவில் வெளியிடப்படும் என்றார்.
மேலும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்துக் கேட்டபோது, மாணவர்களிடையே கோவிட் -19-ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து சில மாநிலங்களில் பள்ளிகளைத் திறக்கப்பட்ட பின்னர் மீண்டும் மூட வேண்டியிருக்கிறது என்றும் இந்த அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு அரசு ஒரு முடிவை எடுக்கும் என்றும் செங்கோட்டையன் கூறினார்.
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை டிசம்பர் 31-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் NEET 2021 மற்றும் கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) 2021 ஆகியவை இந்த தேதிகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"