RRB Group D result 2018: ஆர்.ஆர்.பி-யின் குரூப் டி தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் இந்த நேரத்தில், இறுதித் தேர்வுக்கு எதுவெல்லாம் முக்கியம் என்பதை இங்கு பார்ப்போம்.
1. கணினியை அடிப்படையாகக் கொண்ட இத்தேர்வில் வெற்றியடைந்தவர்கள், உடற்தகுதி தேர்வில் கலந்துக் கொள்ள வேண்டும்.
2. சி.பி.டி தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கப்படும். அதாவது நீங்கள் தரும் தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் 1/3 மதிப்பெண் குறைக்கப்படும்.
3. இந்த ஆட்சேர்ப்பு முழுக்க முழுக்க மதிப்பெண் மற்றும் தகுதி அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
4. ஆர்.ஆர்.பி தேர்வில் வெற்றி பெற்றதும் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை ரயில்வே வாரியம் சரிபார்க்கும்.
5. விண்ணப்பதாரர்கள் தேவையான விபரங்களை பூர்த்தி செய்யாமல் இருந்தால், நிராகரிக்கப்படுவார்கள்.
6. விண்ணப்பிப்பதற்கு முன்பே தாங்கள் மருத்துவ ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப் படுத்திக் கொள்ளவும். பின்னர் தெரிவிக்கும் பட்சத்தில் மாற்று பணி வழங்கப்பட மாட்டாது.
7. 7-வது ஊதிய கமிஷனின் படி ரூ.18,000/- சம்பளம் வழங்கப்படும். அதே நேரத்தில் அலோவன்ஸும் உண்டு.
8. ஆர்.ஆர்.பி / ஆர்.ஆர்.சி-யால் தடை செய்யப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது.
9. விண்ணப்பதாரர்களுக்கு, அனைத்துத் தேர்வுகளும் முடிந்த பின்னர் மெரிட் அடிப்படையில் ரயில்வேயில் பணியமர்த்தப்படுவார்கள்.
10. ஆர்.ஆர்.பி குரூப் டி-யின் இறுதி முடிவுகள் வெளியானதும், பாதுகாப்பு அல்லது இழப்பீடு பாண்ட் பெற வேண்டும்.
இந்நிலையில், RRB குரூப் D தேர்வின் முடிவுகள் இன்று (மார்ச்.4) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் rrbbilaspur.gov.in என்ற தளத்தில் தங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.