கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்க்கப்படுவதால், நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்த நிலையில், மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் புதிய சட்டத்துக்கு நேற்று தமிழக அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
தேசிய அளவிலான நீட் தேர்வு அறிமுகப்படுத்தியப் பிறகு, மருத்துவப் படிப்புகளில் சேரும் தமிழக அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை கணிமாக சரிந்தது. உதாரணமாக, கடந்த ஆண்டு நீட் தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை வெறும் 4.27%. சதவீதமாக இருந்தது.
கடந்த மார்ச் 21 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , " நீட் தேர்வு 2016-17ல் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து ஒரு ஆண்டு காலம் விலக்கு பெற்றார். நாங்கள் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம். சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தையும் அணுகி, நீட் தேர்வு கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களை எவ்வாறு கடுமையாக பாதித்தது என்பதை விளக்கினோம், ” என்று தெரிவித்தார்.
மேலும், அரசு பள்ளி மாணவர்களிடம் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற ஆர்வம் குறையத் தொடங்கியுள்ளது. மருத்துவ படிப்புகளில் தேர்ச்சியடையும் சதவீதமும் குறைந்துள்ளது. எனவே, நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதலவர் அறிவித்தார்.
மேலும், இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும், குழு தனது பரிந்துரையை ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்கும் என்று தெரிவித்தார்.
நீட் தேர்வில் தேர்ச்சியடையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்புகளில் உள் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான அறிக்கையை முதல்வரிடம் நேற்று நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு சமர்பித்தது.
8, 2020
இந்த அறிக்கையின் பரிந்துரைகள் அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% உள்ஒதுக்கீடு வழங்கு வகை செய்யும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
15, 2020
இருப்பினும், மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சாசனத்தில் இடமுள்ளதா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஏற்கனவே, மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த 85% இட ஒதுக்கீடு அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil