Advertisment

கேரளா கல்வி வரலாற்றின் புதிய தூதர் - 105 வயது பாகிரதி அம்மா

தன்னைப் பிறப்பித்தவர்கள், தன்னுடன் பிறந்தவர்கள், தனக்கு பிறந்தவர்கள் ஆகியோருக்காக படிப்பை நிறுத்திய பாகிரதி அம்மாவிற்கு, இன்று ஒட்டு மொத்த குடும்பமே பக்கத் துணையாய் நின்று தேர்வெழுத வைத்திருக்கிறார்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கேரளா கல்வி வரலாற்றின் புதிய தூதர் - 105 வயது பாகிரதி அம்மா

கேரள அரசின் எழுத்தறிவு திட்டத்தின் மூலமாக, கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த பாகிரதி அம்மா என்ற 105 வயது முதியவர் நான்காம் வகுப்புக்கு இணையான தேர்வை எழுதியிருக்கிறார்.

Advertisment

இதன்மூலம், கேரளாவில் மாட்டும் இல்லாமல், ஓட்டுமொத்த இந்தியாவிலும், அதிக வயதில் எழுத்தறிவிற்கான சமநிலை தேர்வில் கலந்து கொண்டவர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

பாகிரதி அம்மா, தனது 9 வயதில் குடும்ப சூல்நிலைகளுக்காக மூன்றாம் வகுப்போடு தனது பள்ளி படிப்பை முடித்துக் கொண்டவர். சிறு வயதிலேயே திருமண வாழ்விற்கு சென்றுவிட்டதால் படிப்பு அவருக்கு ஒரு கனவாகவே போனது. தன்னைப் பிறப்பித்தவர்கள், தன்னுடன் பிறந்தவர்கள், தனக்கு பிறந்தவர்கள் ஆகியோருக்காக படிப்பை நிறுத்திய பாகிரதி அம்மாவிற்கு, இன்று ஒட்டு மொத்த குடும்பமே பக்கத் துணையாய் நின்று தேர்வெழுத வைத்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகது.

இந்த நான்காம் வகுப்பு எழுத்துத் தேர்வில் பாகிரதி அம்மாவிற்கு மூன்று நாட்கள்  நடைபெற்றது. மலையாள மொழித் தேர்வு , கணிதம், சுற்றுச்சூழல் அறிவியல் என மூன்று நாட்கள் இடத்தேர்வு நடைபெற்றது.

கேரளா எழுத்தறிவு திட்டத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில், "பாகிரதி அம்மாவிற்கு நான்காம் வகுப்பு பாடத் திட்டங்களை புரிய வைப்பது ஒன்று கடினம் இல்லை. ஏனெனில் அவர்கள் அறிவுத்திறன் மிகவும் கூர்மையானது, இருந்தாலும் இவருக்கு இருக்கும் ஒரே சிக்கல் தொடர்ச்சியாக எழுத முடியாது, இதனால் தான் மூன்று நாட்களில் தேர்வு நடத்தப்பட்டது" என்றார்.

பாகிரதி அம்மா தற்போது தனது இளைய மகள் தங்கமணி அம்மா (70) உடன் தங்கியுள்ளார். மூத்த மகன் துளசிதாரா பிள்ளை (84) என்பவர் நிதி உதவியையும் அளித்து வருகிறார். டிவியில் நாடகம் பார்ப்பது, கிரிக்கெட்டைப் பார்ப்பது அவர்களுக்கு மிகவும் பிடிக்குமாம்.

சில நாட்களுக்கு முன்பு இதே ஆலப்புழாவைச் சேர்ந்த கார்த்தாயினி அம்மா தனது 96 வயதில் அக்‌ஷராலக்ஸம் என்ற கேரளா அரசின் எழுத்தறிவு இயக்கத்தின் மூலம் படித்து தேர்வில் 100 மதிப்பெண்களில் 98 மதிப்பெண்கள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தாயினி அம்மா தற்போது தேர்வெழுதிய பாகிரதி அம்மாவிற்கு உந்துதலாய் இருந்தார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment