10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சியடையாத மற்றும் தேர்வு எழுதாத மாணவர்கள் துணைத் தேர்வை எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியானது. தேர்வு எழுதியவர்களில் மொத்தம் - 8,18,743 பேர் (91.55%) தேர்ச்சி பெற்றனர். மாணவியர் - 4,22,591 பேரும் (94.53 %) மாணவர்கள் - 3,96,152 பேரும் (88.58%) தேர்ச்சி பெற்றனர். இந்தாண்டு மாணவர்களை விட மாணவியர் 5.95 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 92.45% பேர் தேர்ச்சி பெற்றனர் .10-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 13,510 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 12,491 தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எதிர்பாராத விதிகமாக இந்த தேர்வில் தேர்ச்சியடையாமல் இருக்கும் மாணவர்கள் மற்றும் தேர்வை எழுதாத மாணவர்கள் துணைத் தேர்வை எழுதலாம். அப்படி துணைத்தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் மே 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மறு தேர்வு ஜூலை 2-ம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.