2014 ஆம் ஆண்டுக்கு முன் 51,348 ஆக இருந்த எம்.பி.பி.எஸ் இடங்கள் 110 சதவீதம் அதிகரித்து தற்போது 1,07,948 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். முதுகலை இடங்கள் 2014க்கு முன் 31,185 ஆக இருந்து 67,802 ஆக 117 சதவீதம் அதிகரித்துள்ளது.
அஸ்ஸாமின் துப்ரி தொகுதி மக்களவை உறுப்பினர் எம்.பத்ருதீன் அஜ்மல் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்: காவலரின் டாக்டர் கனவை நனவாக்கிய 7.5% இடஒதுக்கீடு; 2-வது முயற்சியில் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம்
“மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, எம்.பி.பி.எஸ் இடங்களை அரசு உயர்த்தியுள்ளது. 2014க்கு முன் 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகள் தற்போது 704 ஆக 82% அதிகரித்துள்ளது. மேலும், 2014க்கு முன் 51,348 ஆக இருந்த எம்.பி.பி.எஸ் இடங்கள் 110% அதிகரித்து தற்போது 1,07,948 ஆகவும், முதுகலை இடங்கள் 2014க்கு முன் 31,185 ஆக இருந்த நிலையில் தற்போது 67,802 ஆகவும் 117% அதிகரித்து உள்ளது,” என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
மேலும், பீகாரில் 1,615 அரசு மற்றும் 1,050 தனியார் எம்.பி.பி.எஸ் இடங்கள் உட்பட, 2023-24 ஆம் ஆண்டிற்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 56,283 MBBS இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 51,665 MBBS இடங்களும் உள்ளன என்று குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் அறிவித்துள்ளார்.
2018-19ல் 253 ஆக இருந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 2022-23ல் 355 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2018ல் இருந்து மேல்நோக்கிய அதிகரிப்பை மட்டுமே கண்டுள்ளது, அதாவது 2019-20ல் 279, 2020-21ல் 289 மற்றும் 2021-22ல் 322.
இதேபோல், 2018 முதல் இந்தியாவின் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2018-19ல் 248 தனியார் மருத்துவக் கல்லூரிகள் இருந்தன, இது 2019-20 இல் 260 ஆகவும், 2020-21 இல் 269 ஆகவும், 2021-22 இல் 290 ஆகவும், 2022-23 இல் 293 ஆகவும் அதிகரித்துள்ளது.
"சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தற்போதுள்ள மாவட்ட/ பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கான மத்திய நிதியுதவித் திட்டத்தை (CSS) நிர்வகித்து வருகிறது. இதில் வடகிழக்கு சிறப்பு வகை மாநிலங்களுக்கு 90:10 மற்றும் பிற மாநிலங்களுக்கு 60:40 என்ற விகிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதிப் பகிர்வு உள்ளது. இத்திட்டத்தின் கீழ், பீகாரில் உள்ள 08 மருத்துவக் கல்லூரிகள் உட்பட 157 மருத்துவக் கல்லூரிகள் ரூ.1628 கோடி மதிப்பில் மூன்று கட்டங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.” என்றும் அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil