11ம் வகுப்பு: 40% பாடத்திட்டம் குறைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு

9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிக் கூடங்களை திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார்

School reopening, School syallabus reduced

TN reduced Syllabus For Class 9 :  கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 11-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் 40 சதவீதம் குறைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

இழந்த நேரத்தை ஈடுசெய்யும் பொருட்டு  10, மற்றும் 12ம் வகுப்பு 2021ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு பாடத்திட்டத்தில் 40 சதவீத பாடஅளவு குறைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முன்னதாக அறிவித்தது.

கற்றல் அளவை எட்டுவதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, முக்கிய அம்சங்களைக் கை வைக்காமல், கூடிய மட்டும் 50 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.

தமிழகத்தில், கடந்த 19ம் முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் மீண்டும் செயல்பட்டு வருகின்றன. திறக்கப்பட்ட சில பள்ளிகளில் கோவிட் 19 பாதிப்பு உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. மேலும், 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிக் கூடங்களை திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 11th class school syllabus revised upto 40 per cent syllabus for class 11 reduced

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com