பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு; தேர்ச்சி விகிதம் 95.03%; மாணவர்களை விட அதிகம் தேர்ச்சி பெற்ற மாணவிகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
School

இந்த ஆண்டும் சாதித்து காட்டிய பெண்கள்

2024-25 கல்வி ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3 ஆம் தேதி முதல் தொடங்கி பல்வேறு பாடங்களுக்கு மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை சரியாக 9.15 மணிக்கு வெளியானது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள்  https://results.digilocker.gov.in/  மற்றும்  https://tnresults.nic.in/  என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக அறிந்துகொள்ளலாம்.

Advertisment

பொதுத்தேர்வில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2025-ஆம் ஆண்டு இது 95.03% ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் 2022-ல் 93.76%, 2023-ல் 94.03% மற்றும் 2024-ல் 94.56% ஆக இருந்தது.

சிறைவாசிகளுக்கான பிளஸ் 2 தேர்வில் 92.86% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 140 பேரில் 130 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.70% ஆகவும் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 93.16% ஆகவும் உள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம் போல இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,05,472(96.70%) மற்றும் மாணவர்கள் 3,47,670(93.16%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Advertisment
Advertisements

பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 91.94% ஆகும். அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 95.71% ஆக உள்ளது. தனியார் சுயநிதிப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 98.88% ஆக உள்ளது.

இருபாலர் (ஆண் மற்றும் பெண்) பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 95.30% ஆக உள்ளது. பெண்கள் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 96.50% ஆக உள்ளது. ஆண்கள் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 90.14% ஆக உள்ளது.

இதன்படி, அரசுப் பள்ளிகளை விட அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதிப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகமாக உள்ளது. மேலும், ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் கணிசமாக அதிகம். இருபாலர் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதத்தை விட அதிகமாக உள்ளது.

 

12th Exam Mark

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: