/tamil-ie/media/media_files/uploads/2021/12/college-2.jpg)
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 2014 முதல் 2021 வரை 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்தார்.
அந்த 122 மாணவர்களில் 24 பேர் எஸ்சி பிரிவும், 2 பேர் எஸ்டி பிரிவும், 41 பேர் ஒபிசி பிரிவும், 3 பேர் சிறுபான்மை பிரிவையும் சேர்ந்தவர்கள் என அமைச்சர் தனது எழுத்துப்பூர்வமான பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
அரசால் வெளியிடப்பட்ட நிறுவனம் ரீதியாக புள்ளிவிவர பட்டியல்படி, ஐஐடியில் 34 மாணவர்களும், ஐஐஎம்-இல் 5 மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்த 34 மாணவர்களில் 5 பேர் எஸ்சி பிரிவும், 13 பேர் ஓபிசி பிரிவையும் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த ஏழு ஆண்டுகளில் மத்திய பல்கலைக்கழகங்களில் தான் அதிகளவில் 37 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் தனது பதலில், "கல்வி அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் தொழில்நுட்பக் கல்வியை பிராந்திய மொழிகளில் அறிமுகப்படுத்துதல், கற்றலில் மாணவர்களுக்கு உதவுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாணவர்கள், வார்டன்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் சக மாணவர்களின் மனநிலை சோர்வாக இருப்பதை கவனித்தால், உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான், சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை வழங்க முடியும்" என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.