scorecardresearch

சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு ரிசல்ட்: திருவனந்தபுரம், பெங்களூரு, சென்னை மண்டலங்கள் டாப்

12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், தேர்ச்சி விகிதத்தில் சென்னை 3 வது இடம் பிடித்துள்ளது.

சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு ரிசல்ட்
சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு ரிசல்ட்

12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், தேர்ச்சி விகிதத்தில்  சென்னை 3 வது இடம் பிடித்துள்ளது.

சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இந்நில்லையில் 87.33% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. சென்ற ஆண்டு 92.71 ஆக இருந்த தேர்ச்சி சதவிகிதம் இந்த வருடம் 87.33 % ஆக குறைந்துள்ளது.

இந்திய அளவில் உள்ள முக்கிய நகரங்களின் தேர்ச்சி விகிதத்தை பார்க்கும்போது திருவனந்தபுரம் 99.91 % பெற்று முதல் இடத்திலும், பெங்களூரு 98.64%  இரண்டாம் இடம் இடத்திலும், சென்னை 97.40 % பெற்று முன்றாம் இடத்தில் உள்ளது. டெல்லி  93.24 % பெற்று 4 வது இடத்தில் உள்ளது. 80.6 % பெற்று டேராடூன் மற்றும் 78.05 % பெற்று அலகாபாத் கடைசி இரண்டு இடங்களில் உள்ளது.

இந்நிலையில் பெண் மாணவிகள் 90.68 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண் மாணவர்கள் 84.67 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மே 8ம் தேதி தமிழகத்தில் 12 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 94.03 ஆக இருந்தது குறிப்பிடதக்கது. தமிழகத்திலும் ஆண் மாணவர்களைவிட பெண் மாணவர்கள் கூடுதல் சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த வருடம் 16,60,511 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். சென்ற வருடம் 14,35, 366 மாணவர்கள் கலந்துகொண்டனர். நாடு முழுவதிலும்  6, 759 மையங்களில் இந்த ஆண்டு தேர்வு நடைபெற்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: 12th cbse result 2023 chennai in top 3 list pass percentage analysis of result

Best of Express