Advertisment

ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி... பிளஸ் டூ தேர்ச்சியில் கீழே விழுந்த மாவட்டங்கள்; சிறப்பு முயற்சிகளை அரசு எடுக்குமா?

50 ஆயிரம் 12ஆம் வகுப்பு மாணவர்கள், தற்போது நடைபெற்ற பொதுத்தேர்வை எழுதவில்லை என்று தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
12th public exam

தமிழ்நாட்டில் பிளஸ்- 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொண்டு அதற்கேற்ற உயர்ப் படிப்பினை தேர்ந்தெடுக்க ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

Advertisment

தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்பிற்கான பொதுத்தேர்வு, இந்தாண்டு மார்ச் 3ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வில், மொத்தம் 8.8 லட்சம் மாணவர்கள் 3,169 தேர்வு மையங்களில் எழுதியுள்ளனர்.

இருப்பினும், 50 ஆயிரம் 12ஆம் வகுப்பு மாணவர்கள், தற்போது நடைபெற்ற பொதுத்தேர்வை எழுதவில்லை என்று தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களின் எண்ணிக்கை மொத்தம் எட்டு லட்சத்து மூவாயிரத்து முந்நூற்று என்பதை ஐந்து (8,03,385) ஆகும். இதில் பங்குகொண்ட மாணவியரின் எண்ணிக்கை 4,21,013 மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை 3,82,371 ஆக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், தற்போது வெளியான தேர்வு முடிவில், தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 7,55,451 ஆகும். அதாவது தமிழகத்தில் மொத்தம் 94.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

இதில், தேர்ச்சி பெற்ற மாணவியர் மொத்தம் 4,05,753 ஆகும், (மொத்தம் 96.38%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கை மொத்தம் 3,49,697 ஆகும், (மொத்தம் 91.45%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், மூன்றாம் பாலினத்தவர் (ஒருவர்) தேர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவர்களை விட மாணவியர் 4.93% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு (2022ஆம் ஆண்டு) நடந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8,06,277 ஆக இருந்தது. சென்ற ஆண்டு தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் 7,55,998 (93.76%) ஆகும்.

இந்தாண்டு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் அதிகம் தேர்ச்சி பெற்றவை பட்டியலில் 7 மாவட்டங்கள் வந்துள்ளது.

இதில், விருதுநகர் மாவட்டத்தில், 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மொத்தம் 97.85% ஆக உள்ளனர். இதனையடுத்து, திருப்பூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 97.79% ஆக பதிவாகியுள்ளது.

இதை தொடர்ந்து, பெரம்பலூரில் 97.59% ஆகவும், கோயம்பத்தூரில் 97.57% ஆகவும், தூத்துக்குடியில் 97.36% ஆகவும், சிவகங்கையில் 97.26% ஆகவும் மற்றும் கன்னியாகுமரியில் 97.05% ஆகவும் பதிவாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில், 12ஆம் வகுப்பு தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை 10,465 மற்றும் மாணவியர்களின் எண்ணிக்கை 11,843 என்று மொத்தம் 22,308 ஆவர். இதில் தேர்ச்சி பெற்றவர்களில் மாணவர்கள் 10,135, மாணவியர் 11,693 என்று மொத்தம் 21,828 ஆவர். தேர்ச்சி பெற்றவர்களில் மாணவர்கள் 96.85% ஆகவும், மாணவியர் 97.85% ஆகவும் பதிவாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், 12ஆம் வகுப்பு தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை 11,295 மற்றும் மாணவியர்களின் எண்ணிக்கை 13,437 என்று மொத்தம் 24,732 ஆவர். இதில் தேர்ச்சி பெற்றவர்களில் மாணவர்கள் 10,947, மாணவியர் 13,238 என்று மொத்தம் 24,185 ஆவர். தேர்ச்சி பெற்றவர்களில் மாணவர்கள் 96.92% ஆகவும், மாணவியர் 98.52% ஆகவும் பதிவாகியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில், 12ஆம் வகுப்பு தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை 3,745 மற்றும் மாணவியர்களின் எண்ணிக்கை 3,646 என்று மொத்தம் 7,391 ஆவர். இதில் தேர்ச்சி பெற்றவர்களில் மாணவர்கள் 3,624, மாணவியர் 3,589 என்று மொத்தம் 7,213 ஆவர். தேர்ச்சி பெற்றவர்களில் மாணவர்கள் 96.77% ஆகவும், மாணவியர் 98.44% ஆகவும் பதிவாகியுள்ளது. மேல் குறிப்பிட்டுள்ள மூன்று மாவட்டங்கள் தமிழகத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 12ஆம் வகுப்பு தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை 10,061 மற்றும் மாணவியர்களின் எண்ணிக்கை 10,462 என்று மொத்தம் 20,523 ஆவர். இதில் தேர்ச்சி பெற்றவர்களில் மாணவர்கள் 8,648, மாணவியர் 9,760 என்று மொத்தம் 18,408 ஆவர். தேர்ச்சி பெற்றவர்களில் மாணவர்கள் 85.96% ஆகவும், மாணவியர் 93.29% ஆகவும் பதிவாகியுள்ளது. இந்த மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் 89.69% ஆக பதிவாகியுள்ளது.

மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில், 12ஆம் வகுப்பு தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை 6,515 மற்றும் மாணவியர்களின் எண்ணிக்கை 6,799 என்று மொத்தம் 13,314 ஆவர். இதில் தேர்ச்சி பெற்றவர்களில் மாணவர்கள் 5,360, மாணவியர் 6,263 என்று மொத்தம் 11,623 ஆவர். தேர்ச்சி பெற்றவர்களில் மாணவர்கள் 82.27% ஆகவும், மாணவியர் 92.12% ஆகவும் பதிவாகியுள்ளது. இந்த மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் 87.30% ஆக பதிவாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Education News 12th Exam Mark
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment