Advertisment

12th Exam Results Live Update: தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வெளியீடு

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது.

author-image
WebDesk
New Update
Tamilnadu government guidelines for schools

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. இதையடுத்து மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு முறையும் அறிவிக்கப்பட்டது. 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 50%, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 20%, 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிட்டு இறுதி மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து இன்று முடிவுகள் வெளியாகிறது.

Advertisment

பிளஸ் 2 மாணவ, மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பிளஸ் 2 மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது

இதனை தொடர்ந்து மதிப்பெண் பட்டியலை வரும் 22ஆம் தேதி www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

11:15am

+2 தேர்வில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

11:15am

+2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை : 3,80,500
+2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியர் எண்ணிக்கை : 4,35,973
பொதுப்பாடப்பிரிவு : 7,64,593
தொழிற்பாடப்பிரிவு : 51,880
தேர்ச்சி பெற்றவர்கள் : 100%

11:25 am

அறிவியல் பாடப்பிரிவில் 30,600 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர்

வணிகவியல் பாடப்பிரிவில் 8,909 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர்

தொழிற்கல்வி பாடப்பிரிவில் 136 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர்

11:30am

மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் தேர்வு நடத்தப்படும் . 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை நாளை மறுநாள் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 10:51 (IST) 19 Jul 2021
    ஒட்டுக்கேட்பு குறித்து விளக்கம் தேவை - சுப்ரமணியன் சுவாமி

    தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகார் குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

    இஸ்ரேல் நிறுவனத்துடன் மோடி அரசுக்கு தொடர்பா? இல்லையா? என்பது பற்றி கூற வேண்டும் எனவும் ஒட்டுக்கேட்பு குறித்து விளக்கினால் தான் நல்லது இல்லாவிடில் அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழல்போல் தலைவலிதான் என பாஜகவின் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.


Tamilnadu Live News Udpate Tamilnadu News Latest Plus 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment