scorecardresearch

100-க்கு 138 மதிப்பெண்: அதிர்ச்சி அளித்த  பிளஸ் 2 மாணவி மார்க்

மதுரை சூரக்குளத்தில் 12ம் வகுப்பு மாணவிக்கு தவறாக வந்த மதிப்பெண் பட்டியல் திருத்தி வழங்கப்பட்டுள்ளது.

100-க்கு 138 மதிப்பெண்

மதுரை சூரக்குளத்தில் 12ம் வகுப்பு மாணவிக்கு தவறாக வந்த மதிப்பெண் பட்டியல் திருத்தி வழங்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் 10 தேதி வெளியானது. இந்நிலையில் மானவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண்களை பெற்றிருந்தார். இதுபோல திருநங்கை மாணவியான ஸ்ரேயா 337 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் மதுரை சூரக்குளத்தில் உள்ள ஒரு மாணவிக்கு ஒரு பாடத்தில் 138 மதிபெண்களும், மற்ற எல்லா பாடங்களில் 70-க்கு மேற்பட்ட மதிப்பெண்கள் எடுத்தும் தேர்ச்சிபெறவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் தேர்வுக்கு மாணவி விண்ணப்பித்தபோது பழைய பாடதிட்டத்தில் பதிவுசெய்ததால், குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் திருத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவின்  பேரில் இன்று மதுரை முதன்மை கல்வி அலுவலர், அந்த மாணவிக்கு  பொதுத் தேர்வு  முடிவுகளை வழங்கினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: 138 mark for 100 in 12th mark sheet tamilnadu