திட்டமிட்ட நாட்களில் ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு (ஜே.இ.இ முதன்மை) மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) நடத்துமாறு பல்வேறு உயர்க்கல்வியை சேர்ந்த சுமார் 150 கல்வியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தேசத்தின் எதிர்காலமாக திகழும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றம் கோவிட் -19 பெருந்தொற்றால் நிச்சயமற்ற தன்மையில் உள்ளது. கல்லூரி சேர்க்கை மற்றும் வகுப்புகள் குறித்த ஏராளமான அச்சங்கள் மாணவர்கள் மத்தியில் உள்ளன. அவை விரைவில் தீர்க்கப்பட வேண்டும்,”என்று கல்வியாளர்கள் ஆகஸ்ட் 27 அன்று அனுப்பிய கடிதத்தில் எழுதினர்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
மோதிஹரி மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் - சஞ்சீவ் சர்மா, அகமதாபாத் பாபா சாகேப் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் -அமில் உபாத்யாய், கேரள மத்திய பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் ஜே.ஜெயபிரசாத், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகதைச் சேர்ந்த ஆசிரியர்கள் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் அடங்குவர்.
ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு(ஜேஇஇ) மற்றும் நீட் தேர்வை நடத்துவதற்கான தனது முடிவையும், அதற்கான தேதிகளையும் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம். தேர்வை ஒத்திவைக்கப்பட்டால் மாணவர்களின் விலைமதிப்பற்ற நாட்கள் வீணடிக்கப்படும் என்ற காரணத்தால், உச்சநீதிமன்றமும் இந்த தேர்வுகளை ஒத்திவைப்பதற்கான மனுவை தள்ளுபடி செய்தது" என்று கடிதத்தில் தெரிவித்தனர்
" நமது மாணவர்களின் கனவுகளையும் எதிர்காலத்தையும் சமரசம் செய்து கொள்ள முடியாது. சிலர் தங்கள் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காகவும் , அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட முயற்சிக்கின்றனர். உங்களது திறமையான தலைமையின் கீழ், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு ஜேஇஇ முதன்மை, நீட் தேர்வுகளை மத்திய அரசு வெற்றிகரமாக நடத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்று கடிதத்தில் குறிப்பிட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil