கல்லூரி படிப்பை தற்போதுதான் முடித்தவரா? : அழைக்கிறது ஐடி நிறுவனங்கள்

வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு ( ஏ.ஐ), பிக் டேட்டா போன்றவைகளில் 2 லட்சம் வேலை உருவாகி உள்ளது. ஆனால்.....

By: Updated: October 24, 2019, 12:05:12 PM

எக்ஸ்பீரிஸ் ஐடி வேலைவாய்ப்பு அவுட்லுக் கணக்கெடுப்பின்படி, வரும் அக்டோபர் 2019 முதல் மார்ச் 2020 வரையிலான காலப்பகுதியில், கார்ப்பரேட் கம்பெனிகளில் தாங்கள் பணியமர்த்தும் மொத்த வேலையாட்களில், ஐ.டி துறையில் இருந்து 47.54 சதவீத மக்களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளனர். ஆறு மாதகங்களுக்கு முன்பு இந்த சதவீதம்  53.41 க இருந்தன.

தொழிநுட்பத் திறன்களைத் தாண்டி,  மாற்று சிந்தனை,   தலைமைத்துவ பண்பு, வரும் சவாலை எளிமையாக பார்க்கப் பழகுதல் போன்றவைகளே தற்போதைய கார்ப்பரேட் கம்பெனிகள் மிகவும் எதிர்பார்க்கின்றன.

அறிக்கையின்படி, தகவல் தொழில்நுட்ப வேலை சந்தை,  தொழில்நுட்ப வளர்ச்சியை பிரதிபலிப்பதாகவே இருக்கின்றது. உதாரணமாக, வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு ( ஏ.ஐ), பிக் டேட்டா போன்றவைகளில் 2 லட்சம் வேலை உருவாகவுள்ளது. ஆனால், இந்த வேலைகளை நிரப்புவதற்கான திறமை பற்றாக்குறை 2021ம் ஆண்டில் அதிக அளவில் காணப்படும் என்று அறிக்கை கூறுகிறது.

அருணாச்சல பிரதேசத்தில் பஸ் பள்ளியாக மாறிய கதை – வீடியோ 


இன்று,  இந்தியாவில் இருக்கும் அநேகமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் புதுமுகங்களை ( பெரும்பாலும் ஐந்து வருட அனுபவம் உடையவர்களை ) எடுக்கவே விரும்புவதாக கூறுகிறது.

மேலும், பெருநகரங்களில் இருக்கும் நிறுவனங்கள் தான் அதிக திறமையாளிகளை ஈர்த்துவருகிறது.  இருந்தாலும் ஜெய்ப்பூர், சண்டிகர், கோயம்புத்தூர், அகமதாபாத், நாக்பூர், புவனேஸ்வர் விசாகப்பட்டினம் போன்ற டையர்-2 நகரங்களில் இருக்கும் நிறுவனங்களும் அதிக திறமைசாலிகளை ஈர்க்க ஆரமித்திருக்கின்றன என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

அறிக்கையின்படி- அடிப்படை தொழில்நுட்ப திறன்கள், ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களின் வேலை வாய்ப்பை நிர்ணயித்தாலும்,  உயர் அறிவாற்றல் திறன்,சமூக நுண்ணறிவு, ஒருங்கிணைந்த சிந்தனை போன்றவைகள், வேலை அமர்த்தலில் முக்கிய பங்கேற்றுவதாக உள்ளது.

இந்த சர்வேக்காக , 509 இந்திய கார்ப்பரேட் கம்பெனிகளை (ஐ.டி, நான்- ஐ.டி ) கணக்கெடுத்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:2 lakh new jobs in artificial intelligence and big data but huge talent shortage problem

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X