20% quota for Tamil medium candidates in state govt jobs: தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
Advertisment
துவக்கம் முதல் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு முழுப்பயனும் கிடைக்க வேண்டும் என பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு 10, 12 ஆம் வகுப்புகளையும், 10 ஆம் வகுப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்ற சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுது.
இதற்கு, தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டு 8 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தமிழ் வழியில் பயின்றோருக்கு தமிழக அரசுப் பணியில் 20% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை 2010 ஆம் ஆண்டில் கலைஞர் கருணாநிதி நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.க ஸ்டாலின் நன்றி: "தமிழ்வழி படித்தோருக்கு அரசுப்பணிகளில் 20% இடஒதுக்கீடு சட்டத் திருத்தத்திற்கு 8 மாதமாக அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்துவது ஏன் என்று இரு நாட்களுக்கு முன்பு கேட்டேன். ஆளுநர் அனுமதி வழங்கியதாக செய்தி கிடைத்துள்ளது. நன்றி! 8 மாதமாக தூங்கிய தமிழக அரசின் மந்த நிலைக்குக் கண்டனங்கள்" என்று மு. க ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil