தமிழ்வழி மாணவர்களுக்கு அரசுப் பணியில் 20% இடஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்

TNPSC 20 per cent reservation : நன்றி! 8 மாதமாக தூங்கிய தமிழக அரசின் மந்த நிலைக்குக் கண்டனங்கள்” என்று மு. க ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.

tamil nadu governor banwarilal purohit, governor banwarilal purohit approved, banwarilal purohit apporoved to bill 7.5 per cent internal reservation, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டம், tamil nadu, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதா, mk stalin thanks to governor, ஆளுநருக்கு முக ஸ்டாலின் நன்றி mbbs seats, 7.5 per cent internal reservation fot govt school students, மருத்துவப் படிப்பு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு

20% quota for Tamil medium candidates in state govt jobs:  தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும்  மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

துவக்கம் முதல் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு முழுப்பயனும் கிடைக்க வேண்டும் என பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு 10, 12 ஆம் வகுப்புகளையும், 10 ஆம் வகுப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்ற சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுது.

 

 

இதற்கு, தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டு 8 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தமிழ் வழியில் பயின்றோருக்கு தமிழக அரசுப் பணியில் 20% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை 2010 ஆம் ஆண்டில் கலைஞர் கருணாநிதி நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.க ஸ்டாலின் நன்றி: “தமிழ்வழி படித்தோருக்கு அரசுப்பணிகளில் 20% இடஒதுக்கீடு சட்டத் திருத்தத்திற்கு 8 மாதமாக அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்துவது ஏன் என்று இரு நாட்களுக்கு முன்பு கேட்டேன். ஆளுநர் அனுமதி வழங்கியதாக செய்தி கிடைத்துள்ளது. நன்றி! 8 மாதமாக தூங்கிய தமிழக அரசின் மந்த நிலைக்குக் கண்டனங்கள்” என்று மு. க ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 20 per cent quota for tamil medium candidates in state govt jobs

Next Story
இந்த வாரம் விண்ணப்பிக்க வேண்டிய மத்திய அரசு பணிகள்: லிஸ்ட் இங்கே
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express