கல்லூரிகள் திறப்பு 2 மாதம் தள்ளிப் போகும்? செப்டம்பரில் திறக்க நிபுணர்கள் பரிந்துரை

இந்த குழுவின் பரிந்துரையை யு.ஜி.சி ஏற்றுக்கொண்டால், மருத்துவ படிப்பு (ஆகஸ்ட் 31) பொறியியல்போன்ற தொழில்நுட்ப விண்ணப்பங்களின் சேர்க்கைக்கான கடைசி தேதியை   (ஆகஸ்ட் 15)நீட்டிக்க உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழல் உண்டாகும். 

By: Updated: April 25, 2020, 12:39:07 PM

இந்தியாவில், பெரும்பாலும் உயர்க்கல்வி வகுப்புகள் ஜூலை மாதம் நடுப்பகுதியில் தொடங்கும் நிலையில், 2020- 21ம் ஆண்டிற்கான உயர்க்கல்வி வகுப்புகள் செப்டம்பர் மாதம் வரை தள்ளிவைக்க வேண்டும் என்று  ஏழு நபர்கள்  அடங்கிய குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்த்தொற்றை தடுக்கும் விதமாக, இந்தியா அரசு நாட்டில் செயல்படும் அனைத்து பள்ளிகளையும்,  பல்கலைக்கழகங்களையும்  முடக்கம் செய்வதாக கடந்த மார்ச்- 16ம் தேதி அறிவித்தது. மேலும், மே  மாதம் மூன்றாம் தேதி வரை தேசிய அளவிலான பொது முடக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

பல்கலைக்கழகங்களின் தேர்வு, உயர்க்கல்வி அட்டவணை தொடர்பான பிரச்சினைகள் குறித்து முடிவெடுக்க  பல்கலைக்கழக மானியக் குழுவால் அமைக்கப்பட்ட ஏழு உறுப்பினர்கள் கொண்ட பரிந்துரைக் குழு  நேற்று தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்தது.

புதிய கல்வி அமர்வுக்கு இரண்டு மாதங்கள் தாமதமாதிக்கலாம் என்பதைத் தவிர, நடத்தப்படாத இறுதி செமஸ்டர் தேர்வுகளை, வரும் ஜூலை மாதம் நடத்தவும் இந்த குழு பரிந்துரைத்துள்ளது.

ஹரியானா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சி குஹாத் தலைமையில் பரிந்துரை குழு செயல்பட்டது. ஏ சி பாண்டே, இணை -பல்கலைக்கழக இயக்குனர்; ஆதித்யா சாஸ்திரி, பனஸ்தாலி வித்யாபீத்-ன் துணைவேந்தர்;  பஞ்சாப் பல்கலைக்கழகத் தலைவர்  கர்னல் ராஜ்குமார் ஆகியோர் உறுப்பினர்களாக பணியாற்றினார்.

பரிந்துரைக் குழு சமர்பித்த அறிக்கையின் அடிப்படையில், பல்கலைக்கழகத் தேர்வுகள் மற்றும் கல்வி அட்டவணையை குறித்த வழிகாட்டுதல்களை யுஜிசி உருவாக்கும்.பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில் ” இந்த வழிகாட்டுதல்கள் உயர்கல்வி நிறுவனங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. இருப்பினும், புதிய கல்வியாண்டை நிறுவனங்கள் எப்போது தொடங்க வேண்டும் என்ற தெளிவான காலகட்டத்தை வகுக்கும்” என்று கூறினார்.

இந்த குழுவின் பரிந்துரையை யு.ஜி.சி ஏற்றுக்கொண்டால், மருத்துவ படிப்பு (ஆகஸ்ட் 31) பொறியியல்போன்ற தொழில்நுட்ப விண்ணப்பங்களின் சேர்க்கைக்கான கடைசி தேதியை   (ஆகஸ்ட் 15)நீட்டிக்க உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழல் உண்டாகும். ஏனெனில், இந்த படிப்புகளுக்கான சேர்க்கை  தேதி உச்ச நீதிமன்றத்தால்  கண்காணிக்கப் படுகிறது.

ஆன்லைன் கல்வி குறித்த பரிந்துரைகளை வழங்க, யுஜிசி-யால்  அமைக்கப்பட்ட மற்றொரு குழு,“பன்முகத்தன்மை, உள்ளூர் சூழல், கற்பவர்களின் தயார்நிலை, உள்கட்டமைப்பு , தொழில்நுட்ப ஆதரவு” ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களை ஆன்லைன் தேர்வை கட்டாயப்படுத்தக் கூடாது  என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) துணைவேந்தர் நாகேஸ்வர் ராவ் ஆன்லைன் கற்றல் தொடர்பான குழுவின் தலைவராக உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:2020 21 academic year pushed to september engineering admission last date extesnion committee recommendation ugc

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X