ஜேஇஇ மெயின் தேர்வு வருடத்திற்கு 4 முறை நடத்த பரிசீலனை : மத்திய கல்வி அமைச்சர்

Multiple attempts for JEE Main Exam : ஏதேனும் 75 கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம்.

By: December 10, 2020, 7:05:16 PM

JEE, NEET & CBSE Exam 2021 : மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், வரவிருக்கும் போட்டித் தேர்வுகள், பொதுத் தேர்வுகள் குறித்து  ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களுடன் காணொலி (#EducationMinisterGoesLive) வாயிலாக உரையாடினார்.

ஜேஇஇ தேர்வு தேதி மற்றும் பாடத்திட்டங்கள் குறித்த மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பிப்ரவரி மாதம் தொடங்கி நான்கு முறைகள் (மார்ச், ஏப்ரல், மே 2021) ஜெஇஇ 2021 தேர்வை நடத்த வேண்டும் என்ற கருத்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையில் அடுத்த கல்வி ஆண்டில் சேர்வதற்கான 2021 ஜேஇஇ தேர்வை மாணவர்கள் ஒன்று முதல் நான்கு முறை வரை எழுதலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார். பிப்ரவரி மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் ( மார்ச் , ஏப்ரல் & மே -2021) தேர்வு நடைபெறும் என்றும், மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது நான்கு முறையும் தேர்வை எழுதலாம் என்றும், மாணவர்களின் சிறந்த செயல் திறனின் அடிப்படையில் அவர்கள் தரவரிசையில் இடம் பெறுவார்கள் என்றும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.

கடந்த ஆண்டின் பாடத்திட்டமே தொடரும் என்றும், மொத்தம் கேட்கப்படும் 90 கேள்விகளிலிருந்து (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 30 கேள்விகள்) மாணவர்கள் ஏதேனும் 75 கேள்விகளுக்கு (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 25 கேள்விகள்) பதில் அளிக்கும் வகையில் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

நீட் தேர்வுக்கான பாடத் திட்டங்கள், தேதி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடனும், தேசிய மருத்துவ ஆணையத்துடனும் ஆலோசித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று பதிலளித்தார்.

அதேபோல் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய பின் முடிவு செய்யப்படும் என்றார் அவர். செய்முறை தேர்வுகளை எதிர்கொள்ள முடியாத மாணவர்களுக்கு மாற்று வழிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் நீக்கப்பட்ட பகுதிகள் குறித்து பள்ளிகளுக்கு சந்தேகங்கள் இருப்பின் www.cbseacademic.nic.in இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த கல்வி ஆண்டில் இதே போன்று ஆன்லைன் வழியாக மாணவர்களிடம் பேசிய அவர், “தேசிய அளவில் மருத்துவக் கல்வி, பொறியியல் கல்வி ஆகியவற்றுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளுக்கான புதிய தேதிகளை அறிவித்தார்” என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:2021 jee main exam to be held four times in a year choice to answer 75 questions

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X