குஜராத்தில் தமிழ், தெலுங்கு, மராத்தி, ஒடியா, சிந்தி, அரபு, உருது, பாரசீகம் ஆகிய எட்டு மொழிகளை பள்ளிகளில் பயிலும் வசதியும், மொழிவழிக் கல்வியும் உள்ளது.
ஆனால் தற்போது, குஜராத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ‘டீச்சர்ஸ் ஆப்டிடியூட் டெஸ்ட் (டெட்)’ எனப்படும் தகுதித்தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மூலமே தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளுக்கான ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.
மாநில அரசு நடத்தும் இந்த தேர்வின் தகுதி பி.எட் ஆகும். தற்போது இந்த தேர்வு நேற்று (ஜூன் 4) நடைபெற்றது. இந்த ‘டெட்’ தேர்வில் இந்த முறை தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட 8 மொழிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகை விடப்பட்டுள்ளது.
இதனால், அம்மொழிகளில் பி.எட் படித்து ஆசிரியர் பணிகளுக்காகக் காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பெரும் ஏமாற்றம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு இந்த தேர்வானது நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடத்தப்படும் ‘டெட்’ தேர்வில் 8 மொழிகள் கைவிடப்பட்டிருப்பது அந்த ஆசிரியர் பணிக்கு காத்திருப்பவர்களை பாதித்துள்ளது. இதனால் குஜராத் அரசின் முடிவை எதிர்த்து உருது மொழி ஆசிரியர் பணிக்காகக் காத்திருப்போர் அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil