Advertisment

அரசுப் பள்ளி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு: 80,000 பேர் விண்ணப்பம்

பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு இதுவரை 82,000ஆசிரியர்கள் விண்ணப்பத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
student and teacher
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

2024-25 புதிய கல்வியாண்டுக்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்விற்கு, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (EMIS) போர்டல் மூலம் இதுவரை 82,479 ஆசிரியர்கள் விண்ணப்பத்துள்ளனர். 

Advertisment

தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 9,295 பேர் இடமாறுதல் கோரி விண்ணப்பபம் அளித்துள்ளனர். தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் இடமாறுதல் கோரி 5,814 விண்ணப்பங்களும், நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 1,640 பேரும் என மொத்தம்  35,669 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் உள்ள ஆசிரியர்களில், பட்டதாரி ஆசிரியர்கள் 25,711 பேர் பணியிட மாறுதல் கோரி  விண்ணப்பத்துள்ளனர். முதுநிலை ஆசிரியர்கள்  17,296 பேர்,  மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 1,186 என மொத்தம் 46,810 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்கள் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்ட பின்னர், கலந்தாய்வு  தேதி, ரேங்க் அடிப்படையில் முன்னுரிமைப் பட்டியலுடன் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Teachers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment