தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இன்று (ஜூலை 22) முதல் கலந்தாய்வு தொடங்குகிறது. இன்று அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்பு பிரிவில் வரும் மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்குகிறது.
இன்று தொடங்கும் கலந்தாய்வு செப்.11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தாண்டு கலந்தாய்வில் கலந்து கொள்ள 1 லட்சத்து 99,868 மாணவர்கள் தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த ஜூலை 10-ம் தேதி வெளியிடப்பட்டது.
இன்று பொறியியல் கலந்தாய்வை உயர்க் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 29 முதல் தொடங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ரத்து செய்துள்ளது.
போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்ககளால் 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளன.
இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் 433 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.80 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“