9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு வெளியிட்ட அறிவுப்பு மாணாக்கர்கள் மத்தியிலும், ஆசரியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2020-21ஆம் கல்வியாண்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா நோய்த் தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 19ம் தேதி முதல், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. மேலும், தமிழகத்தில் ஒன்பது மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி முதல் திறக்கப்பட்டன.
கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் செயல்படாத பள்ளிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டு, இடை நிலைகமற்றும் மேல்நிலை மாணவர்கள் மீண்டும் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் வாழ்க்கையில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. மாணவர்கள் பள்ளிகளுக்கு திரும்பியதால் ஆசரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மனநிறைவை ஏற்படுத்தியது. இந்நிலையில், 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த, அறிவிப்பு பள்ளி செல்லும் மாணவர்களுக்கு ஊக்கம் தருவதாக அமையாது என்று தமிழக அரசு பள்ளி ஆசிரயர் ஒருவர் தெரிவித்தார்.
ஆல் பாஸ் அறிவிப்பால் அரசு, தனியார் பள்ளி வேறுபாடின்றி அத்தனை ஆசிரியர்களும் வருத்தம் அடைந்துள்ளதாக தெரிகிறது. பிள்ளைங்களை கொஞ்சமாவது படிக்க வச்சிருக்கலாமே! இந்த ஆண்டு சிலபஸ் படிக்காம போனா பிள்ளைங்களுக்கு பின்னாடி கஷ்டம்தானே எனும் நிஜமா அக்கறை அது. அரசியல்வாதிகளுக்கு அது புரியாது என்று சமூக ஊடங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆல் பாஸ் அறிவிப்பால் அரசு, தனியார் பள்ளி வேறுபாடின்றி அத்தனை ஆசிரியர்களும் வருத்தம் அடைந்துள்ளதாக தெரிகிறது. பிள்ளைங்களை கொஞ்சமாவது படிக்க வச்சிருக்கலாமே! இந்த ஆண்டு சிலபஸ் படிக்காம போனா பிள்ளைங்களுக்கு பின்னாடி கஷ்டம்தானே எனும் நிஜமா அக்கறை அது. அரசியல்வாதிகளுக்கு அது புரியாது.
— SKP KARUNA (@skpkaruna) February 25, 2021
இந்த கல்வியாண்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வையும், அரையாண்டு தேர்வையும் ( பொதுவாக, டிசம்பர் மாதம் வழக்கமாக நடத்தப்படும் ) ரத்து செய்யப்பட்டது. மேலும், ஆன்லைன் கல்வி குறித்த வழிமுறைகளில் , " ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என்றும், ஆன்லைன் வகுப்புகளில் செய்யும் மதிப்பீடுகள் யாவும் இறுதி மதிப்பெண்களுக்கு எடுத்துக் கொள்ளப்படாது" எனவும் தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தாலும், அது எதன் அடிப்படையில் இருக்கும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது
தனியார் பள்ளிகளைப் பொறுத்த வரையில் காலாண்டுத் தேர்வு, அரையாண்டு த் தேர்வு , தொடர்ச்சியான ஆன்லைன் மதிப்பீடு முறை பின்பற்றப்பட்டது. எனவே, இந்த அறவிப்பு அவர்களுக்கும் ஏமாற்றமாய் அமைந்திருக்கும். மேலும், பல தனியார் பள்ளிகள், பள்ளி வாரியாக 10ம் வகுப்புத் தேர்வை நடத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறையை சந்திக்கவும் தனியார் பள்ளிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இருக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் மிகவும் அவசியமாகிறது. இந்த அறிவிப்பினால், ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை குறையுமா? இல்லை அதிகரிக்குமார்? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். வெளி மாநிலங்களில் உயர்க்கல்வி தொடரும் மாணவர்களுக்கும் இந்த அறிவிப்பு சிக்கலை ஏற்படுத்தும்.
குறைந்த பட்சம், 10 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்தியிருக்கலாம். தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வருவார்களா என்று உத்தரவாதம் அளிக்க முடியாது. ஏனென்றால், ஒரு மாணவன் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வந்த பிறகு அதே பாடத்தை தொடர்ந்து படிக்க ஆர்வம் வராது என்ற கருத்து கல்வியாளர்களிடம் நிலவி வருகிறது.
நாடு முழுவதிலும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 வகுப்பு வாரியத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. மேலும், கொரோனா நோய்ப் பரவல் அதிகரித்து காணப்படும் மகராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் 10ம் வகுப்புத் தேர்வு நடைபெறும் என்று அம்மாநில அரசு சில நாட்களுக்கு முன்பாக அறிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.