/indian-express-tamil/media/media_files/2025/08/23/tnea-2025-3rd-round-analysis-2025-08-23-19-30-12.jpg)
TNEA 2025: மூன்றாம் சுற்றின் முடிவில் எந்தக் கல்லூரிகள் டாப்? மாணவர்கள் விரும்பும் படிப்புகள் எவை?
2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை (TNEA) மூன்றாவது மற்றும் இறுதிச் சுற்றின் விரிவான பகுப்பாய்வு குறித்தும் இறுதிச் சுற்றில் கல்லூரிகளில் உள்ள காலியிடங்கள், மாணவர்கள் அதிகம் விரும்பிய பாடப் பிரிவுகள், சிறந்த கல்லூரிகளின் சேர்க்கை நிலை மற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவுரைகள் குறித்தும் கல்வியாளர் Career Guidance ஜெயப்பிரகாஷ் கூறியவற்றை பற்றி பார்ப்போம்.
மாணவர் சேர்க்கை மற்றும் காலியிடங்கள்:
இறுதிச்சுற்றில் மொத்தம் 50 ஆயிரத்து 93 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் 2 ஆயிரத்து 991 மாணவர்கள் மட்டுமே கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாகவும், மொத்தமுள்ள 54 ஆயிரத்து 587 பொறியியல் இடங்களில், 42 ஆயிரத்து 512 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 12 ஆயிரத்து 75 இடங்கள் இன்னும் காலியாகவே உள்ளதாகவும் ஜெயப்பிரகாஷ் கூறினார்.
கல்லூரி வாரியான சேர்க்கை நிலை:
சுயநிதி கல்லூரிகள்: தமிழ்நாட்டில் உள்ள சுயநிதி கல்லூரிகளில், 95% இடங்களுக்கு மேல் நிரப்பிய 164 கல்லூரிகள் உள்ளன. 80% இடங்களுக்கு மேல் நிரப்பிய 200+ கல்லூரிகள் உள்ளன. 292 கல்லூரிகளில் 50% அதிகமான இடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால், 32 கல்லூரிகளில் 10% க்கும் குறைவான இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 19 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சேர்க்கை நடந்துள்ளதாகவும் ஜெயப்பிரகாஷ் குறிப்பிடுகிறார்.
அரசு நிறுவனங்கள்: மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் உள்ள சிறந்த அரசு நிறுவனங்களில் 100% சேர்க்கை நடந்துள்ளது. இதில் CECRI, MIT, PSG போன்ற முன்னணி தொழில்நுட்பக் கல்லூரிகள் அடங்கும்.
முன்னணி சுயநிதி கல்லூரிகள்: PSG, Thiagarajar, Kumaraguru, Lakshmi Narayana போன்ற பிரபலமான சுயநிதி கல்லூரிகள் 98% க்கும் அதிகமான சேர்க்கையை அடைந்துள்ளன.
மாணவர்கள் அதிகம் விரும்பிய படிப்புகள்
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில், கணினி அறிவியல் (Computer Science) தொடர்பான படிப்புகள் அதிக அளவில் விரும்பப்பட்டுள்ளன. அதே சமயம், மாணவர்கள் கோர் இன்ஜினியரிங் (Core Engineering) படிப்புகளையும் தேர்வு செய்துள்ளனர்.
அதிக மாணவர்கள் சேர்ந்த கல்லூரிகள்
ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங்: 2,161 இடங்கள்
சாய்ராம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங்: 1,750 இடங்கள்
ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜ்: 1,570 இடங்கள்
பனிமலர் இன்ஜினியரிங் காலேஜ்: 1,426 இடங்கள்
பாவை இன்ஜினியரிங் காலேஜ்: 1390 இடங்கள்
கல்லூரி சேர்க்கைக்குப் பிறகு, பட்டப்படிப்பு மட்டும் போதாது என்றும், மாணவர்கள் தங்களது திறன்களை (skills) வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்களுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஜெயப்பிரகாஷ் வலியுறுத்தி உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.