தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட விமான நிலைய மண்டலங்களில் இளநிலை மற்றும் முதுநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 119 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Junior Assistant (Fire Service)
காலியிடங்களின் எண்ணிக்கை : 73
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது Diploma in Mechanical/ Automobile/ Fire படித்திருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 31000- 3% - 92000
Junior Assistant (Office)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 31000- 3% - 92000
Senior Assistant (Electronics)
காலியிடங்களின் எண்ணிக்கை : 25
கல்வித் தகுதி: Diploma in Electronics/ Telecommunication/ Radio Engineering படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 36000- 3% -110000
Senior Assistant (Accounts)
காலியிடங்களின் எண்ணிக்கை : 19
கல்வித் தகுதி: Graduates preferably B.Com. படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 36000- 3% -110000
வயதுத் தகுதி: 20.12.2023 அன்று 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு.
தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.aai.aero என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.01.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/AAI_SR_NOTIFICATION_2023_FINAL_20-12-2023.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“