Advertisment

AAI Jobs: விமானத்துறையில் 906 காலியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

இந்திய விமானநிலைய வேலைவாய்ப்பு; 906 பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
New Update
Chennai Airport

இந்திய விமானநிலைய வேலைவாய்ப்பு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் செக்யூரிட்டி ஸ்கீரினர் (Security Screener) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. சென்னை உள்பட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 906 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.12.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Advertisment

Security Screener

காலியிடங்களின் எண்ணிக்கை : 906

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.11.2023 அன்று 27 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

சம்பளம் : முதல் வருடம் ரூ. 30,000, இரண்டாம் வருடம் ரூ. 32,000, மூன்றாம் வருடம் ரூ. 34,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் ஆன்லைனில் https://aaiclas.aero/careeruser/login என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. SC/ST, PWD, பெண்கள் பிரிவுகளுக்கு ரூ. 100

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://aaiclas.aero/uploads/career/AAICLAS6991700142294.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs Airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment